த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள்

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் சம்பந்தமாக 2019 நவெம்பர் 26ஆம் திகதி அன்று செய்தித்தாள் மற்றும் செய்தி வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட சில தகவல்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் கவனம் ஈர்க்கப்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கி பின்வருவனவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறது. 

இலங்கை மத்திய வங்கியானது நிதித்தொழில் சட்டத்தின் கீழ் நிதி வியாபாரத்தினை நடத்துவதற்காக த பினான்ஸ் கம்பனி பிஎல்சிக்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச்செய்வது பற்றிய அறிவித்தலை 2019 ஒத்தோபர் 23ஆம் திகதியன்று விடுத்தது. எந்தவொரு நம்பகமான முதலீட்டாளரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆர்வத்தை வெளிப்படுத்தலுடன் மூலதன உள்ளீட்டிற்கான நிதியத்திற்கான ஆதாரங்களுடன் சேர்த்து வியாபார மீளமைத்தல் திட்டத்தினை த பினான்ஸ் கம்பனி பிஎல்சியானது இலங்கை மத்திய வங்கியினது பரிசீலனைக்காக உரிமம் இரத்து செய்வது பற்றிய அறிவித்தல் விடுத்த திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் நிதித்தொழில் சட்ட அதிகார நியதிகளின் கீழ் சமர்ப்பிக்கமுடியும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்தது.

த பினான்ஸ் கம்பனி பிஎல்சியானது மூன்று ஆர்வமுள்ள தரப்பினர் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு கருத்தில்கொள்வதாக கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்ததாக மேற்கூறிய செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த போதிலும் அத்தகைய திட்டங்கள் எதுவும் இலங்கை மத்திய வங்கிக்கு இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. 

எனவே, சாத்தியமான முதலீடுகள் தொடர்பாக செய்தித்தாள்கள் மற்றும் செய்தி வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் உண்மை மற்றும் சரியானவை அல்ல என்பதை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகிறது.

மேற்கூறியவற்றை கருத்திற்கொண்டு, நிதித்தொழில் சட்டத்தின் படி உரிமத்தினை இரத்துச்செய்வது பற்றிய அறிவித்தல்விடுத்த திகதியிலிருந்து 60 நாட்கள் காலாவதியான பின்னர் த பினான்ஸ் கம்பனி பிஎல்சிற்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச்செய்யும் அறிவிப்பு குறித்த முடிவை நாணயச் சபை எடுக்கும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவிக்க விரும்புகிறது.

Published Date: 

Wednesday, November 27, 2019