இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2019 ஒத்தோபர்

2019 ஒத்தோபரில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 57.6 சுட்டெண் பெறுமதிக்கு அதிகரித்தமைக்கு 2019 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும்.

உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகளில் அதிகரிப்பு, முக்கியமாக எதிர்வரும் பண்டிகைக் காலக் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக உணவு மற்றும் குடிபானத் துறையின் தயாரிப்பில் அவதானிக்கப்பட்டது. அதேவேளை, தொழில்நிலையும் உணவு மற்றும் குடிபானங்களின் தயாரிப்பு மற்றும் அணியும் ஆடைகள் துறைகளில் அதிகரித்தது. இதற்கு எதிர்வரும் காலத்தில் ஏற்படக்கூடிய உயர்ந்த கேள்வியை ஈடுசெய்வதற்காக உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு புதிய ஊழியர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டமையே முக்கிய காரணமாகும்.

புதிய கட்டளைகளும் உற்பத்தியும் உயர்ந்த வீதத்தில் விரிவடைந்த போதும், கொள்வனவுகளின் இருப்புக்கள் பெருமளவிற்கு மாறாமல் இருந்தமைக்கு முன்னைய மாதங்களிலிருந்து ஒன்றுசேர்ந்த இருப்புக்கள் முன்கொண்டு வரப்பட்டமையே காரணமாகும். மேலும், நிரம்பலர் விநியோக நேரம் ஓரளவு மெதுவான வீதத்தில் நீடிக்கப்பட்டது.

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் தயாரிப்பின் அனைத்து துணைச் சுட்டெண்களும் 50.0 தொடக்க அளவினை விஞ்சி (நடுநிலை) மீளாய்விற்குரிய காலப்பகுதியில் தயாரிப்பு நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை சமிக்ஞைப்படுத்தின.

முழுவடிவம்

Published Date: 

Thursday, November 14, 2019