Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2020 யூனில் அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 மேயின் 5.2 சதவீதத்திலிருந்து யூனில் 6.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பின் மூலம் பிரதானமாக தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 மேயின் 11.1 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 13.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 யூனில் 0.8 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 மேயின் 5.2 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 5.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

முழுவடிவம்

இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணுவதற்கு தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுவருகின்ற வழிமுறைகள்

நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணும் நோக்குடனும் கொவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய சாத்தியமான எதிர்க்கணியத் தாக்கங்களைப் பரிசீலனையில் கொண்டும் இலங்கை மத்திய வங்கியினது நாணயச் சபையின் விதந்துரைப்புடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் மாண்புமிகு நிதிஇ பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர்இ மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் மீதான வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது 2020 யூலை 02ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் ஆறு (6) மாத காலப்பகுதிக்குப் பின்வரும் வழிமுறைகளை அறிமுகப்படுத்துகின்ற கட்டளையொன்றினை விடுத்திருக்கின்றார்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2020 யூன்

நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகளை முழுமையாகத் தளர்த்தியதனைத் தொடர்ந்து நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளின் இயல்புநிலையிலிருந்து நன்மையடைந்து தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது 2020 மேயுடன் ஒப்பிடுகையில் 18.0 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட மாதத்திற்கு மாத அதிகரிப்புடன் 67.3 இனைப் பதிவுசெய்து 2020 யூனில் கணிசமாக அதிகரித்தது.

நாணயச் சபைக்கான நியமனங்கள் - திரு. சஞ்சீவ ஜயவர்த்தன சனாதிபதி சட்டத்தரணி, முனைவர். ராணி ஜயமகா மற்றும் திரு. சமந்த குமாரசிங்க

அரசியல் யாப்பு ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் நாணயவிதிச் சட்டத்தின் பிரிவு 8(2) (இ) இன்கீழ் மேதகு சனாதிபதியினால் சபைக்கு நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மூன்று புதிய உறுப்பினர்களும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராகப் பணியாற்றும் பொருட்டு கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டனர். 

திரு. சஞ்சீவ ஜயவர்த்தன, சனாதிபதி சட்டத்தரணி 2020.02.26ஆம் நாளிலிருந்து இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கான உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதுடன் முனைவர். ராணி ஜயமகா மற்றும் திரு. சமந்த குமாரசிங்க ஆகிய இருவரும் 2020.06.29ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நாணயச் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

அவர்களது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:

 திரு. சஞ்சீவ ஜயவர்த்தன, சனாதிபதி சட்டத்தரணி

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - மே 2020

2020 மேயின் இரண்டாம் வாரத்தில் பெரும்பாலான முடக்க வழிமுறைகள் நீக்கப்பட்டதன் காரணமாக வெளிநாட்டுத் துறை உறுதியடைந்தமைக்கான அறிகுறிகளைக் காட்டியது. அத்தியாவசியமல்லா இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் வணிகப்பொருள் இறக்குமதிகளில் குறிப்பிடத்தக்க குறைப்பினை ஏற்படுத்தியதன் காரணமாக மேயில் அதன் தாக்கம் அவதானிக்கப்பட்டது. அதேவேளை, ஏப்பிறலில் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்திருந்த வணிகப்பொருள் ஏற்றுமதிகள் இம்மாத காலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்கக் கூடுதலாக எழுச்சியுற்றது. 2019இன் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2020 மேயில் தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவாக இருந்த போதும் 2020 ஏப்பிறலில் பதிவுசெய்யப்பட்ட கடுமையான குறைந்த மட்டத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. நிதியியல் பாய்ச்சல்களைப் பொறுத்தவரையில் அரச பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளின் மொத்த வெளிப்படுத்துகை கணிசமானளவிற்குக் குறைவாக இருந்தமைக்கு மே மாதத்தில் அரச பிணையங்களில் சிறிதளவு வெளிப்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்டமையே காரணமாகும்.

த பினான்ஸ் பிஎல்சி வைப்பாளர்களுக்கான இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் நட்டஈட்டுக் கொடுப்பனவுகள்

த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள், இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் வைப்பாளரொருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.600,000 தொகைக்குட்பட்டு தீவுமுழுவதுமுள்ள 63 மக்கள் வங்கிக் கிளைகள் ஊடாக 2020.06.07 அன்று ஆரம்பிக்கப்பட்டன. 

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மூலம் தகைமை உறுதிப்படுத்தப்பட்ட ஏறத்தாள 147,000 வைப்பாளர்களுக்கு நட்டஈடு வழங்கத் தேவையான நிதியங்கள், இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்திலிருந்து ஏற்கனவே ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2020.07.12ஆம் திகதி வரை 19,279 வைப்பாளர்கள் தமது நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை மக்கள் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளதுடன் அத்தகைய வைப்பாளர்களுக்கு ரூ.5,175,336,249.68 (ஏறத்தாழ ரூ.5.175 பில்லியன்) கொண்ட தொகை கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளது.

Pages

சந்தை அறிவிப்புகள்