கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 ஓகத்தில் குறைவடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2020 யூலையின் 4.2 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 4.1 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 2019 ஓகத்தில் நிலவிய உயர்ந்த தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கத்தின் மூலம் இது பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கமானது (ஆண்டுக்கு ஆண்டு) 2020 யூலையில் 10.9 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 12.3 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு) 2020 யூலையில் 1.5 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 0.8 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றமானது 2020 ஓகத்தில் 4.8 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. 

கொழும்பு நுகர்வோர்; விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது 2020 ஓகத்தில் 0.0 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. உணவு வகையில் 0.1 சதவீதம் கொண்ட விலை அதிகரிப்பினை ஒரேமாதிரியான வீச்சின் மூலம் உணவல்லா வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை வீழ்ச்சியுடன் எதிரீடு செய்தமை இதற்குக் காரணமாக அமைந்தது. அதற்கமைய, உணவு வகையினுள் தேய்காய், காய்கறிகள் மற்றும் மஞ்சள் என்பனவற்றின் விலைகள் 2020 ஓகத்தில் அதிகரித்தன. எவ்வாறாயினும், உடன் மீன், எலுமிச்சை ஆகியவற்றின் விலைகள் மாத காலப்பகுதியின் போது குறிப்பிடத்தக்களவு வீழச்சியினை பதிவுசெய்தன. உணவல்லா வகையில் சுகாதாரம் (மருத்துவ ஆய்வுகூடங்களுக்கான கொடுப்பனவுகள்) துணை வகையிலுள்ள விடயங்களின் விலைகள் மாத காலப்பகுதியின் போது வீழச்;சியடைந்தன. 

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது (ஆண்டுக்கு ஆண்டு) 2020 ஓகத்தில் 3.2 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. எவ்வாறாயினும், ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2020 யூலையின் 4.0 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 3.8 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Monday, August 31, 2020