Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 யூலையில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 யூனின் 5.2 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவல்லா வகைகளின் பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதன் பின்னர், உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூனின் 11.3 சதவீதத்திலிருந்து 2021 யூலை 11.0 சதவீதத்திற்கு குறைவடைந்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூனின் 2.5 சதவீதத்திலிருந்து 2021 யூலை 3.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 யூனின் 4.1 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 யூனில் மாற்றமின்றிக் காணப்பட்டது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 யூனில் 6.1 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது. இதற்கு, 2020 யூனில் நிலவிய உயர்வான தள புள்ளிவிபரத் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மேயின் 10.3 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 9.8 சதவீதத்திற்கு குறைவடைந்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மேயின் 2.5 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 2.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணும் 2021 யூனில் 5.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. 

நிதியியல் உளவறிதல் பிரிவின் மூலம் 2021ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கான நிருவாகத் தண்டங்களை விதித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டமானது நிதியியல் நிறுவனத்தின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் கடுமை என்பவற்றைப் பரிசீலனையில்கொண்டு குறித்துரைக்கப்படக்கூடியதாகும்.

அதற்கமைய, பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துநராக நிதியியல் உளவறிதல் பிரிவானது நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கு 2021 ஏப்பிறல் 01 தொடக்கம் 2021 யூன் 30 வரையான காலப்பகுதிக்காக மொத்தமாக ரூ.3.0 மில்லியன் தொகையுடைய தண்டங்களை விதித்துள்ளது. தண்டங்களாகச் சேகரிக்கப்பட்ட பணம், திரட்டு நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டன.

மூடீஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விஸஸ் (Moody’s Investors Service) நிறுவனத்தின் அறிவித்தலுக்கான பதிலிறுத்தல்

இலங்கையின் நாட்டிற்கான தரப்படுத்தல் தொடர்பில் மூடீஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விஸஸ் (Moody’s Investors Service) நிறுவனத்தின் மூலமான அறிவிப்பினைத் தொடர்ந்து, நிதி அமைச்சு அதற்கான பதிலிறுத்தலொன்றினை வழங்கியுள்ளது. கீழேயுள்ள இணைய இணைப்பினூடாக அதனைப் பார்வையிட முடியும்:

“70 ஆண்டு நாணய வழங்கல் மற்றும் முகாமைத்துவப் பயணம்” என்ற விசேட நூலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற தொடர்பூட்டல் பணிப்பாளர் செல்வி செலோமி எச் குணவர்த்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற மூத்த முகாமையாளர் திரு. டபிள்யு எம் கே வீரகோன் ஆகியோர் இணைந்து எழுதிய “70 ஆண்டு நாணய வழங்கல் மற்றும் முகாமைத்துவப் பயணம்” எனும் தலைப்பில் இலங்கையில் பயன்படுத்தப்படும் நாணய வரலாறு பற்றிய விசேட நூலொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

வங்கியாளர்கள், மாணவர்கள், நாணயச் சேகரிப்பாளர்கள் மற்றும் இலங்கை நாணயத்துடன் தொடர்புடைய வரலாற்றில் ஆர்வம்கொண்டுள்ளவர்களுக்கான உசாவுகையொன்றாகப் பயன்படுத்தத்தக்க இவ்வெளியீட்டினைத் தொகுப்பதில் நூலாசிரியர்கள் இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களத்தில் பல வருடங்களைக் கொண்ட தமது அனுபவத்தினை பயன்படுத்தியுள்ளனர். இந்நூல், வரலாற்று ரீதியான விவரணத்துடன் கூடிய பண்டைக் காலத்திலிருந்து இலங்கையில் பயன்படுத்தப்படும் நாணயத் தாள்களின் மற்றும் குற்றிகளின் கவர்ச்சிகரமான வர்ண விளக்கப்படங்களையும் கொண்டமைந்துள்ளது, இவை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார பின்னணி பற்றிய கண்ணோட்டமொன்றினையும் வழங்குகின்றன.

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் - 2021” வெளியீடு

“இலங்கையின் பொருளாதார சமூகப் புள்ளிவிபரங்கள் - 2021” என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களமானது எளிதாக உசாவும் விதத்தில் வெளியிட்டின் அமைப்பினை மீளக்கட்டமைத்துள்ள அதேவேளை அதன் உள்ளடக்கத்திற்கு மெருகூட்டுவதற்கு மேலும் புள்ளிவிபரங்களைச் சேர்த்துள்ளது. அதற்கமைய, புதிய பதிப்பானது எட்டு முக்கிய விடயப்பரப்புக்களின் அதாவது ‘தேசிய கணக்குகள்’, ‘பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு’, ‘விலைகள், கூலிகள் மற்றும் தொழில்’, ‘வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி’, ‘அரச நிதி’, ‘பணம் மற்றும் மூலதனச் சந்தைகள்’, ‘நிதியியல் துறை’ அத்துடன் ‘ஏனைய நாடுகளின் புள்ளிவிபரங்கள்’ என்பவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்ட புள்ளிவிபர அட்டவணைகளை உள்ளடக்குகின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்