Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினைத் தொடங்குதல்

 தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினை இலங்கையில் முதன்முறையாக 2021 மாச்சு 04 அன்று தொடங்கி வைப்பதனை அறிவிப்பதில் இலங்கை மத்திய வங்கி பெருமகிழ்ச்சியடைகின்றது. இத்தொடக்க நிகழ்வைக் குறிக்கும்முகமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம அமைச்சரும் நிதித் திட்டமிடல் அமைச்சருமான கௌரவ மகிந்த ராஜபக்ஷ்   அவர்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்கள் மூலம் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயம் வழங்கி வைக்கப்பட்டது. இத்தொடக்க நிகழ்வில் பணம் மற்றும் மூலதனச் சந்தை அத்துடன் அரச தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி அத்துடன் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபன நாட்டிற்கான பிரதானி திருமதி. அமீனா ஆரிப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கை மத்திய வங்கி தற்போதுள்ள தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான அதன் கடமைப்பொறுப்பினை மீளவும் உறுதிப்படுத்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2021 மாச்சு 03ஆம் திகதியன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பேரண்ட பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலித்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. சபையானது தனியார் துறைக்கான கொடுகடன் பகிர்ந்தளிப்புக்களில் அண்மைக்கால மெதுவடைதலினையும் பொருளாதாரத்தின் உற்பத்தித் திறன்மிக்க துறைகளுக்கு போதுமானதற்ற கடன்வழங்கலையும் அவதானத்தில் கொண்டதுடன் தற்போது முன்னெடுக்கப்படும் உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலமைந்த பொருளாதார நடவடிக்கையின் மீட்சிக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, உற்பத்தித் திறன்மிக்க துறைகளுக்கு முனைப்புடன் கடன் வழங்குவதற்கான நிதியியல் முறைமைக்கான தேவையினையும் வலியுறுத்தியது. மேலும், சில சந்தை வட்டி வீதங்களில் அண்மைக்கால மேல்நோக்கிய போக்குகளை சபை அவதானித்ததுடன் குறைவான பணவீக்கச் சூழலைக் கொண்ட பின்னணியில் பொருளாதாரம், உறுதியாக புத்துயிர்பெறுகின்ற அறிகுறிகளை காண்பிக்கும் வரை குறைந்த வட்டி வீதக் கட்டமைப்பினை தொடந்தும் முன்னெடுப்பதற்கான அதன் அர்ப்பணிப்பினை மீளவும் வலியுறுத்தியது.

காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி – 2020 இரண்டாம் அரையாண்டு

கொழும்பு மாவட்டத்தின் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2020இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது 4.6 சதவீத ஆண்டு அதிகரிப்பினைப் பதிவுசெய்து 145.2ஆகக் காணப்பட்டது. எனினும், காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியின் அதிகரிப்பு மட்ட சதவீதமானது அண்மைக்காலங்களில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிப் போக்கிற்கு இசைவாகக் காணப்பட்டது. மேலும், காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி 2020இன் முதலரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2020இன் இரண்டாம் அரையாண்டிற்கு 2.5 சதவீதம் கொண்ட அதகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 பெப்புருவரியில் 3.3 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 சனவரியின் 3.0 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 3.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 சனவரியின் 6.8 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 7.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. எனினும், உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 சனவரியின் 1.4 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 1.3 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

இலங்கை மத்திய வங்கி அதன் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக் குற்றியினை வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி, 1950 ஓகத்தில் அதன் தொழிற்பாடுகளைத் தொடங்கி இலங்கையின் சுபீட்சத்திற்கு அதன் தனித்துவமும் பெறுமதிவாய்ந்ததுமான பங்களிப்பின் 70 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. அதன் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக 2020 திசெம்பர் 31 அன்று ரூ.20 வகை சுற்றோட்டத்திற்கு விடப்படாத ஞாபகார்த்த குற்றி (அலுமீனிய வெண்கலம்) ஒன்றினை வெளியிட்டது. இதற்குச் சமாந்தரமாக மேற்குறித்த சுற்றோட்டத்திற்கு விடப்படாத ஞாபகார்த்தக் குற்றியினை ஒத்த வடிவத்துடன் கூடிய ரூ.20 வகை சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்தக் குற்றியொன்றினை (நிக்கல் பூசப்பட்ட உருக்கு) வெளியிடுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நாணயத்தின் விரிவான விபரம் மற்றும் உற்பத்திக் குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.

ஏற்றுமதிப் பெறுகைகளை நாட்டுக்கு அனுப்புதல் மற்றும் இலங்கை ரூபாவிற்கு மாற்றுதல்: இவ்வழிமுறைகள் ஏன் அவசியமானவை?

 2021 பெப்புருவரி 18 அன்று, நாணயச் சபையானது ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்குத் அனுப்புதல் அத்துடன் அத்தகைய பெறுகைகளை இலங்கை ரூபாவிற்கு மாற்றுதல் தொடர்பில் விதிகளை வழங்கியதுடன் இது தொடர்பில் உரிமம்பெற்ற வங்கிகளுக்கு தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களையும் வழங்கியது.

ஏற்கனவே நடைமுறையிலுள்ள நாட்டிற்க்கு அனுப்புதல் தேவைப்பாட்டிற்கு மேலதிகமான மேற்குறித்த விதிகளும் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களும் நாட்டில் வெளிநாட்டுச் செலாவணி நிலைமையினை வலுப்படுத்துவதற்கும் செலாவணி வீதத்தில் சில மிதமிஞ்சிய தளம்பல்களை ஏற்படுத்திய ஊகச் செயற்பாட்டினை தணிக்கும் பொருட்டும் விடுக்கப்பட்டன.

இவ்விதிகளும் தொழிற்படுத்தல் அறிவித்தல்களும் விடுக்கப்பட்டதிலிருந்து அத்தகைய விதிகள், இலங்கை ஏற்றுமதியாளர்களின் உள்நாட்டு வியாபாரங்களை விரிவுபடுத்துவதிலிருந்து அவர்களை ஊக்கமிழக்கச் செய்யுமென விவாதிக்கின்ற சில ஊடக அறிக்கைகள் வெளிவந்தன. ஏற்றுமதியாளர்களின் சட்டபூர்வமான வருவாய்கள் வங்கித்தொழில் முறைமையினாலும் அரசாங்கத்தினாலும் அபகரிக்கப்பட்டு வருகின்றன எனவும் இவ்வறிக்கைகள் சுட்டிக்காட்டின.

Pages