தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவதானிக்கப்பட்ட சுருக்கத்திலிருந்து 2016 யூனில் சாதகமான நிலைமையொன்றிற்கு மீட்சியடைந்து 55.1 சதவீத சுட்டெண் புள்ளியைப் பதிவுசெய்தது. இது 2016 மேயிலிருந்து 7.2 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். இம்முன்னேற்றத்திற்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பே பக்கபலமாக விளங்கியது. மேலும், அனைத்துக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் நிரம்பலர் வழங்கலிலிருந்து விலகி முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்தது. ஒட்டுமொத்த தரவுப் புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து அனைத்து துணைச் சுட்டெண்களும் தொழில்நிலைச் சுட்டெண்ணிலிருந்து விலகி 50.0 கீழ் மட்ட நிலைக்கு மேலே காணப்பட்டது. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பக்களும் அடுத்த மூன்று மாதங்களுக்கு முன்னேற்றமொன்றினை எடுத்துக்காட்டின. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2015 யூனுடன் ஒப்பிடுகையில் 2.4 சுட்டெண் புள்ளிகள் கொண்ட சிறிதளவு வீழ்ச்சியைக் காட்டியது.
















