சார்க் நிதிய இணைப்பாளர்களின் கூட்டம் 2016 செத்தெம்பர் 1ஆம் நாள் கொழும்பில் நடைபெற்றது

இலங்கை மத்திய வங்கி,சார்க் நிதிய இணைப்பாளர்களின் 24 ஆவது கூட்டத்தினை மத்திய வங்கியின் பணிமனையில் 2016 செத்தெம்பர் 1ஆம் நாளன்று நடத்தியது. சார்க் நிதிய இணைப்பாளர்களின் 24ஆவது கூட்டத்தில் சார்க் நிதிய இணைப்பாளர்களும் சார்க் நிதியத்திலுள்ள மத்திய வங்கிகள் மற்றும் நிதி அமைச்சுக்களிலுமிருந்தான அவதானிப்பாளர்களும் கலந்துகொண்டனர். 

சார்க் நிதியத்தின் பரந்த நோக்கம்யாதெனில்,உறுப்பினர் நாடுகளின் பேரண்டப் பொருளாதாரம் மீது நிதானமான நெருங்கிய ஒத்துழைப்பினை ஏற்படுத்துவதற்கும் பிராந்தியத்திற்குள்ளே அனுபவங்களையும் நிபுணத்துவங்களையும் பகிர்ந்துகொள்ளும் விதத்தில் சார்க் உறுப்பினர் நாடுகளிலுள்ள மத்திய வங்கிகளிடையேயும் நிதி அமைச்சுக்களிடையேயுமான ஒத்துழைப்பினை மேம்படுத்துவதுமேயாகும். 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் சார்க் நிதியத்தின் நடப்பாண்டு தலைவருமான முனைவர். இந்திரஜித் குமாரசுவாமி ஆரம்ப உரையை ஆற்றினார். ஆவரது ஆரமப் உரையில் முனைவர் குமாரசுவாமி சார்க் நிதிய பிராந்திய தரவுத்தளம்,சார்க் நிதிய ஒத்துழைப்பு ஆராய்ச்சி ஆய்வுகள்,அலுவலர் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் மற்றும் சார்க் நிதிய பரஸ்பர பரிமாற்றல் ஒழுங்குகள் போன்ற சார்க் நிதியங்களின் வலையமைப்பினால் மேற்கொண்ட அண்மைய முன்னெடுப்புக்களை பெருவாகப் பாராடடி; னார். குறிப்பாக அதிகரித்த பிராந்திய ஒருங்கிணைப்பினூடாக பிராந்தியத்திலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு பிராந்தியத்திலுள்ள மத்திய வங்கிகள் மற்றும் நிதி அமைச்சுக்களிடையே ஒத்துழைப்பினை அதிகரிக்க வேண்டிய தேவையினை வலியுறுத்தினார்.

Published Date: 

Friday, September 2, 2016