தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஓகத்தில் 4.5 சதவீதத்திலிருந்து 2016 செத்தெம்பரில் 4.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்துள்ளன.
ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 ஓகத்தில் 3.6 சதவீதத்திலிருந்து 2016 செத்தெம்பரில் 3.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.
















