2017 சனவரியில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைகக் ளத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 திசெம்பரில் 4.2 சதவீதத்திலிருந்து 2017 சனவரியில் 6.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2017 சனவரியின் ஆண்டிற்கு; ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்துள்ளன.   

ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 திசெம்பரில் 4.0 சதவீதத்திலிருந்து 2017 சனவரியில் 4.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.   

மாதாந்த மாற்றத்தினைக் கருத்திற்கொள்கையில், தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 2016 திசெம்பரில் 118.0 சுட்டெண் புள்ளியிலிருந்து 2017 சனவரியில் 119.3 சுட்டெண் புள்ளிக்கு அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்பிற்கு உணவு வகைகள் விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். உணவு வகையில், இம்மாத காலப்பகுதியில் அரிசி, தேங்காய், சில பழவர்க்கங்கள், தேங்காய் எண்ணெய், பச்சை மிளகாய், சீனி மற்றும் உடன் மீன் என்பனவற்றின் விலைகள் அதிகரித்தன. உணவல்லா வகையில் 2017 சனவரி காலப்பகுதியில் போக்குவரத்து விடயங்கள், பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள், பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம்; கல்வி;  ஆடைகள் மற்றும் காலணிகள்;  மற்றும் தளபாடங்கள், வீட்டு உபயோகச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டு அலகுகளின் பேணல் துணை வகைகளின் விலைகள் அதிகரித்தன. அதேவேளை, வீடமைப்பு, நீர்; மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள்; நலன்; போக்குவரத்து; தொடர்பூட்டல் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார துணைத் துறைகளின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றிக் காணப்பட்டன.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, February 21, 2017