வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 யூன்

விரிவடைந்துவரும் வர்த்தகப் பற்றாக்குறை, தொழிலாளர் பணவனுப்பல்களிலும் சுற்றுலா வருவாய்களிலும் காணப்பட்ட ஒப்பீட்டு ரீதியில் குறைந்த வளர்ச்சி என்பனவற்றின் காரணமாக 2016 யூனில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையின் செயலாற்றம் தொடர்ந்தும் மிதமான தன்மையினைக் கொண்டதாகக் காணப்பட்டது. ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் படிப்படியான முன்னேற்றத்தினைக் காட்டிய வர்த்தகப் பற்றாக்குறை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டினதும் நலிவடைந்த செயலாற்றத்தின் காரணமாக மேயிலும் யூனிலும் மோசமடைந்தது. சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் ஆண்டின் மற்றைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் யூனில் குறைந்த வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளையில் தொழிலாளர் பணவனுப்பல்களின் வளர்ச்சியும் மிதமானதாகவே காணப்பட்டது. எனினும், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் முதலாவது தொகுதியும் கூட்டுக்கடன் வசதியும் பெறப்பட்டமையின் காரணமாக நிதியியல் கணக்கிற்காக இவ்வுட்பாய்ச்சல்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் பெடரல் றிசேர்வ்வின் வட்டி வீத உயர்வு இன்னமும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதன் காரணமாக உலகளாவிய பொருளாதாரத்தில் காணப்பட்ட அபிவிருத்தி என்பனவற்றின் விளைவாக அரச பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் மீண்டும் அதிகரித்தன. இது ஆண்டின் முதற்காற்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையின் வெளிநாட்டு முதலீடுகளில் காணப்பட்ட தொடர்ச்சியான வெளிப்பாய்ச்சல் அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் 2016 யூனில் தேறிய உட்பாய்ச்சல்களைத் தோற்றுவித்தன. இவ்வபிவிருத்தியில், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதிகளின் விளைவாக அதிகரித்த முதலீட்டாளர் நம்பிக்கையுடன் சேர்ந்து சென்மதி நிலுவை நிலைமையினை அதிகரித்துக் கொள்ளவும் இலங்கையின் ஒதுக்கு மட்டத்தினை குறுங்காலத்திலிருந்து நடுத்தர காலப்பகுதியில் மேம்படுத்திக்கொள்ளவும் உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

முழுவடிவம்

Published Date: 

Monday, September 5, 2016