2016 யூலையில் பணவீக்கம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் (2013=100) அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2015 யூனின் 6.4 சதவீதத்திலிருந்து 2016 யூலை 5.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2016 யூலையில் உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்துள்ளன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 யூனில் 3.1 சதவீதத்திலிருந்து 2016 யூலையில் 3.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாதாந்த மாற்றத்தினைக் பரிசீலனையில் கொள்ளும்பொழுது,  தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 2016 யூனின் 116.1 சுட்டெண் புள்ளியிலிருந்து 2016 யூலையில் 115.2 சுட்டெண் புள்ளிக்கு 0.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இம்மாதாந்த வீழ்ச்சிக்கு முக்கியமாக, உணவு வகையிலுள்ள விடயஙக்ளின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாக அமைந்தது. காய்கறிகள், தேங்காய், உடன்மீன், சீனி, எலுமிச்சம்பழம் மற்றும் நெத்தலி என்பனவற்றின் விலைகள் இம்மாதத்தில் வீழ்ச்சியடைந்தன. 2016 யூலையில் உணவல்லா வகையில் நலம்; தொடர்பூட்டல்; மற்றும் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம்; ஆகிய துணை வகைகள் வீழ்ச்சிகளைப் பதிவுசெய்தன. 2016 யூலையில் தளபாடங்கள், வீட்டுச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டு பேணல்கள்; போக்குவரத்து; உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள்; பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகைகள் அதிகரித்தன. அதேவேளை 2016 யூலையில் வெறிய குடிவகைகள் மற்றும் புகையிலை விலைகள் அதிகரித்தன. இருப்பினும்கூட ஆடை மற்றும் காலணிகள்; வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள்;  மற்றும் கல்வி ஆகிய துணை வகைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றிக் காணப்பட்டன. 

அதேவேளை, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 யூனின் 7.5 சதவீதத்திலிருந்து 2016 யூலையில் 6.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. ஆண்டுச்சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2016 யூனின் 5.3 சதவீதத்திலிருந்து 2016 யூலையில் 5.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

முழுவடிவம்

Published Date: 

Monday, August 22, 2016