இலங்கை மத்திய வங்கியின் 9ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு 2016 திசெம்பர் 2ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாடானது, சமகால தொனிப்பொருட்களின் மீதான ஆராய்ச்சிகளைத் தூண்டுவதனை நோக்கமாகக் கொண்டிருந்த வேளையில் மத்திய வங்கித்தொழில் மற்றும் பேரணட் பொருளாதார முகாமைத்துவம் என்பன தொடர்பான விடயஙக் ள் மீது மத்திய வங்கியின் ஆராய்ச்சியாளர்கள் நாணய அதிகாரிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய ஆராய்ச்சி நிறுவனங்கள் அவற்றின் அண்மைக்கால கோட்பாட்டு ரீதியான அம்சங்களையும் அனுபரீதியான ஆய்வுகளையும் சமர்ப்பிப்பதற்கு ஒரு அரங்கினை உருவாக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது. 2008இல் இது ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இப்பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடானது உலகமெங்குமிருந்து புலமையாளர்களை வெகுவாக கவர்ந்திருப்பதுடன் இதில் ஏராளமான மத்திய வங்கியாளர்கள், கல்விமான்கள் மற்றும் கொள்கைவகுப்போர் முக்கிய உரைகளையும் ஆற்றியிருக்கின்றனர்.
















