இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 சனவரி

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் சனவரியில் 56.2 கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்ததுடன், இது, 2016 திசெம்பருடன் ஒப்பிடுகையில் 2.1 சுட்டெண் புள்ளிகள் குறைவானதாகும். கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சி 2017 சனவரியில் தயாரிப்பு நடவடிக்கைகள் மிதமான வேகத்தில் விரிவடைந்தமையினை எடுத்துக் காட்டியதுடன் இதற்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண்களில் பிரதிபலிக்கப்பட்டவாறு பருவக்காலத்திற்கு பின்னரான முன்னோக்கிய வியாபாரத்திட்டங்களின் மறு ஒழுங்கமைப்பு மேற்கொள்ளப்பட்டமையே பெருமளவிற்குக் காரணமாக அமைந்தது. கொள்வனவு இருப்புத் துணைச் சுட்டெண் சனவரியில் அதிகரித்து இருப்புக்கள் ஒன்று சேர்ந்தமையை எடுத்துக் காட்டியது. இதற்கு நீண்ட நிரமப்லில் வழங்கல் நேரத்தினை நீடிக்கச்செய்த பொருட்களின் வழங்கலில் காணப்படக்கூடிய சாத்தியமான தாமதங்களை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையே முக்கிய காரணமாகும். முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் தொழில்நிலைத் துணைச்சுட்டெண்ணும் அதிகரித்தது. ஒட்டுமொத்த தரவுப்புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து மற்றைய அனைத்து துணைச் சுட்டெண்களும் 50.0 அடிமட்டத்திற்கு மேலேயே காணப்பட்டன. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்காக மேம்பாடுடொன்றினைக் காட்டின.

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 திசெம்பரில் 59.8 சுட்டெண் புள்ளியிலிருந்து 2017 சனவரியில் 57.5 சுட்டெண் புள்ளிகளைப் பதிவுசெய்தது. கடந்தமாதத்தின் பெறுமதியிலும் பார்க்க கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, பணிகள் துறையின் பொருளாதார நடவடிக்கைகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2017 சனவரியில் மெதுவான வேகத்தில் விரிவடைந்தமையினை எடுத்துக்காட்டியது. பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கை துணைச் சுட்டெண்களில் ஏற்பட்ட வீழ்ச்சியும் நிலுவையிலுள்ள பணிகள் துணைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சியும் காரணங்களாகின. தொழில்நிலைச் சுட்டெண் மாற்றமின்றியிருந்த வேளையில் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் துணைச் சுட்டெண் 2016 திசெம்பருடன் ஒப்பிடுகையில் 2017 சனவரியில் அதிகரித்தது. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் தொகுப்பு செயன்முறையில் பரிசீலனைக்கெடுக்கப்படாத விதிக்கப்பட்ட விலைகள் மற்றும் எதிர்கால தொழிலாளர் செலவு முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2017 சனவரியில் அதிகரித்தது. எதிர்கால தொழிலாளர் செலவுகள் 2017 சனவரியிலிருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதியமாறியான தொழிலாளர் செலவிற்கான எதிர்பார்ப்புக்களின் மூலம் அளவிடப்படுகிறது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, February 15, 2017