கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்படும் ஆண்டிற்கு ஆண்டு மாற்றஙக்ளினால் அளவிடப்பட்டவாறான, உணவு மற்றும் உணவல்லா பணவீக்கம் இரண்டினாலும் பங்களிக்கப்பட்ட முதன்மைப் பணவீக்கம் 2016 திசெம்பரின் 4.5 சதவீதத்திலிருந்து 2017 சனவரியில் 5.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட மையப் பணவீக்கமும் 2016 திசெம்பரில் 5.8 சதவீதத்திலிருந்து 2017 சனவரியில் 7.0 சதவீதத்திற்கு விரைவடைந்தது. காலம் பிந்திக்கிடைக்கத்தக்கதாக இருக்கும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை (2013=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமும் மையப் பணவீக்கமும் 2016 திசெம்பரில் மேல்நோக்கிய போக்கினைப் பிரதிபலித்து, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் முறையே 4.2 சதவீதம் மற்றும் 6.7 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்தன. வரிச்சீராக்கங்களின் தாக்கம் மற்றும் மோசமான வானிலைகளின் தாக்கம் என்பனவற்றின் விளைவாக அண்மைக்காலங்களில் பணவீக்கத்தில் அதிகரிப்புக் காணப்பட்டபோதும் பொருத்தமான வழங்கல்பக்க மற்றும் கேள்வி முகாமைத்துவக் கொள்கைகள் என்பனவற்றின் ஆதரவுடன் இவ்வாண்டுப்பகுதியில் பணவீக்கம் சராசரியாக நடுஒற்றை இலக்கமட்டத்தில் காணப்படும் என எறிவுசெய்யப்பட்டது.