தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மாச்சு மாதத்தில் 66.5 கொண்ட சுட்டெண்ணினை பதிவு செய்ததுடன் இது பெப்புருவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.4 சுட்டெண் புள்ளிகளை கொண்ட ஒரு அதிகரிப்பாகும். இது, புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச் சுட்டெண்களின் அதிகரிப்பில் பிரதிபலிக்கப்பட்டவாறு புதுவருட பருவகால கேள்விகளினுடான அதிகரிக்கும் கேள்விகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் பெரிதும் காரணமாக அமைந்து உற்பத்தி நடவடிக்கைகள் 2017 மாச்சில் தொடர்ச்சியான அதிகரிப்பை குறித்துக்காட்டியது. கொள்வனவுகளின் இருப்பானது, ஒன்றுசேர்ந்த இருப்புகளின் அதிகரிப்பு மற்றும் கடந்த மாதத்தில் காணப்பட்ட வழங்குதல் தாமதங்கள் சீர்செய்யப்பட்டமை போன்றவற்றின் காரணமாக அதிகரித்திருந்தது. எவ்வாறாயினும், நிரம்பலர் வழங்கல் நேரம் குறிப்பாக சீனாவின் அவர்களுடைய புதுவருட காலத்திற்கு பிறகு வழங்குதல் ஏற்பாடுகள் சாதாரண நிலையாக்கப்பட்டதுடன் ஒரு குறைவினை பதிவு செய்தது. தொழில்நிலை துணைச் சுட்டெண்ணும் கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது சிறிதளவில் சரிவடைந்து காணப்பட்டது.