இலங்கை சுபீட்சச் சுட்டெண் - 2016

சுபீட்சமானது, நாட்டினதும் அதன் மாகாணங்களினதும் சுபீட்சத்தின் மட்டத்தினை அளவிடுகின்றதும் ஒப்பீடு செய்கின்றதுமான ஒரு கலப்புக் குறிகாட்டியாக விளங்கும் இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணின்1 மூலம் அளவிடப்படுகிறது. இது முன்னைய ஆண்டின் 0.684 இலிருந்து 2016இல் 0.746 இற்கு மேம்பட்டிருக்கிறது. இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணின் துணைச் சுட்டெண்களின் அசைவினைப் பகுப்பாய்வு செய்யும் பொழுது, 2015 இலிருந்து 2016 வரையான காலப்பகுதியில் பொருளாதாரம் மற்றும் வியாபாரச் சூழல் மற்றும் மக்களின் நலனோம்புகை துணைச் சுட்டெண்கள் மேம்பட்ட வேளையில் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு துணைச் சுட்டெண்ணில் மிதமான தன்மையொன்று காணப்பட்டது. 

தொழில்வாய்ப்பு வீதம், முறைசாராத் துறைக் கூலிகள், கைத்தொழில் அடர்த்தி மற்றும் வங்கித்தொழில் அடர்த்தி என்பனவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண்ணின் அதிகரிப்பிற்குப் பங்களித்தன. மக்கள் நலனோம்புகை துணைச் சுட்டெண்ணைப் பொறுத்தவரையில், முன்னேற்றங்களுக்கு நலத்துறைப் பணி வசதிகளின் கிடைப்பனவு, கல்வியின் கிடைப்பனவு மற்றும் அதன் தரம், மக்களின் செல்வம், பொழுதுபோக்கு வசதிகளின் கிடைப்பனவு மற்றும் பயன்பாடு என்பனவற்றில் காணப்பட்ட உயர்ந்த செயலாற்றம் இவற்றிற்கு முக்கிய தூண்டுதலாக விளங்கின. சமூக பொருளாதார உட்கட்டமைப்புத் துணைச் சுட்டெண்ணில் அவதானிக்கப்பட்ட குறைப்பிற்கு குழாய்வழி நீரின் தரம், குடியியல் நடவடிக்கையில் பெண்களின் பங்கேற்பு மற்றும் போக்குவரத்து வசதிகளின்கிடைப்பனவு என்பனவற்றில் காணப்பட்ட குறைந்த மட்டங்களே காரணங்களாக அமைந்தன. எனினும், சமூக பொருளாதார உட்கட்டமைப்புச் சுட்டெண்ணில் வீதியின் உள்ளடக்க அம்சங்கள், மின்வலுவின் கிடைப்பனவு, குற்றமல்லா சூழல், பாடசாலைகளில் தகவல் மற்றும் தொடர்பூட்டல் தொழில்நுட்ப வசதிகளின் கிடைப்பனவு முன்னேற்றத்தினைக் காட்டின.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, December 5, 2017