Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச உப அலுவலகத்தின் தொழிற்பாடுகளை கிளிநொச்சியிலுள்ள பிரதேச அலுவலகத்துடன் ஒன்றிணைத்தல்

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச உப அலுவலகம் அதன் தொழிற்பாடுகளை 2017 யூன்15 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அறிவியல் நகர், கிளிநொச்சியில் அமைந்துளள் பிரதேச அலுவலகத்திற்கு மாற்றியுள்ளது என்பதனை பொது மக்களுக்கு இத்தால் அறிவிக்கபப் டுகிறது. இதன்படி, ஊழியர் சேம நிதியத்துடன் தொடர்பான பணிகளை வழங்குதல், இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளுக்கான விற்பனைப் பீடத்தினை பேணுதல், நிதியியல், முகாமைத்துவ மற்றும் வியாபாரத்திறன்களின் அபிவிருத்தி போனற் வற்றின் மீதான விழிப்புணர்வுகளை நடத்துதல், யாழ்ப்பாண பிராந்தியத்தின் கொடுகடன் விநியோகப் பொறிமுறையினை  மேம்படுத்துதல் போன்ற யாழ் உப அலுவலகத்தினால் வழங்கப்படட் பணிகள் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தின் தற்போதைய அதன் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்படும்.

நாணயக் கொள்கை மீளாய்வு: இல. 04 - 2017

தற்பொழுது நிலவுகின்ற மற்றும் தோற்றம் பெறும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பேரண்ட பொருளாதாரச் சூழல்களைப் பரிசீலனையில் கொண்ட நாணயச் சபை 2017 யூன் 22ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலை பொருத்தமானது என்ற கருத்தினைக் கொண்டிருந்ததுடன் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டத்தில் பேணுவதெனவும் தீர்மானித்தது.

நாணயச் சபையின் தீர்மானமானது, நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டத்தில் பேணுதல் அதன் மூலம் நீடித்த வளர்ச்சி உத்வேகத்திற்கு வசதிப்படுத்தல் ஆகிய குறிக்கோள்களுடன் இசைந்து செல்வதாகக் காணப்பட்டது. நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்த நியாயப்பாடு கீழே வழங்கப்படுகின்றது.

 

 

2017 மேயில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 ஏப்பிறலில் 8.4 சதவீதத்திலிருந்து 2017 மேயில் 7.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பிற்கு மத்தியிலும் தளத்தாக்கமே முக்கிய காரணமாக விளங்கியது. 2017 மேயில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாகப் பங்களித்தன.   

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 ஏப்பிறலில் பதிவுசெய்யப்பட்ட 6.0 சதவீதத்திலிருந்து 2017 மேயில் 6.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.   

இலங்கை மத்திய வங்கி வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட மற்றும் உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள் தொடர்பில் அதன் நிலையினைத் தெளிவுபடுத்துகிறது

இலங்கை மத்திய வங்கி, அதன் தூய நாணத் தாள் கொள்கையினை நடைமுறைக்கிடுவது தொடர்பில் அதனால் வெளியிடப்பட்ட செய்தித்தாள் விளம்பரங்களில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றமை பற்றி அதன் கவனத்தினைச் செலுத்தியிருக்கிறது. தூயநாணயத் தாள் கொள்கையானது, நாணயத் தாள்களின் தர நியமங்களைப் பேணுவதனையும் அதன் மூலம் உண்மையான தாள்களுக்கும் போலித் தாள்களுக்குமிடையிலான வேறுபாட்டினைக் கண்டறிய உதவுவதனையும் நோக்கமாகக் கொண்டதாகும். இக்கொள்கையினூடாக நாட்டின் நன்மதிப்பினை உயர்த்துவதற்கும் வினைத்திறனை மேம்படுத்தி நாணயத் தாள் செயன்முறைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்படும் செலவுகளைச் சிக்கனப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 மே

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மே மாதத்தில் 57.9 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன், இது 2017 ஏப்பிறல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.1 சுட்டெண் புள்ளிகள் கொண்ட அதிகரிப்பாகும். இது 2017 மேயில் தயாரிப்பு நடவடிக்கைகள் மீட்சியடைந்தமையினை குறித்துக்காட்டுவதுடன் 2017 ஏப்பிறலில் அவதானிக்கப்பட்ட பருவகால சுருக்கத்தினை தொடர்ந்து உற்பத்தி மற்றும் புதிய கடட் ளைகள் துணைச்சுட்டெண்களின் விரிவாக்கம் பெரிதும் காரணமாக அமைந்தது. மேலும், தொழில்நிலை துணைச்சுட்டெண்ணினை தவிர கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை பதிவு செய்தன. எவ்வாறாயினும், மாதத்தின் 25ம் நாள் தொடக்கம் உணரப்பட்ட பாதகமான காலநிலை நிலைமைகளால் உருவாகிய  தொழிலாளர் வரவின்மை மற்றும் நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரத்தின் அளவு காரணமாக, நடவடிக்கைகளில் எதிர்பார்க்கப்பட்ட மீட்சியினை மெதுவடைய செய்தது. இருப்பினும்கூட, நடவடிக்கைகளின் எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான ஒரு மேம்பாடோன்றினை எடுத்துக்காட்டியது. 

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - மாச்சு 2017

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கிற்கு மாறாக 2017 மாச்சில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 9.8 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்தன. எனினும், 2017 மாச்சில் வர்த்தகப் பற்றாக்குறையானது 2016இன் தொடர்பான மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட அதிகரிப்பு, இறக்குமதி செலவினத்தில் ஏற்பட்ட உயர்ந்த அதிகரிப்பினால் எதிரீடு செய்யப்பட்டதன் காரணமாக விரிவடைந்தது. பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்திநிலையம் அதன் ஓடுபாதையின் தரைச் செப்பனிடல் வேலைகளுக்காக மூடப்பட்டிருந்தமையின் காரணமாக, சுற்றுலா வருவாய்கள் முன்னைய மாதத்தினைப் போன்றே 2017 மாச்சிலும் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை தொழிலாளர் பணவலுப்பல்களும் 2017 மாச்சில் வீழ்ச்சியைப் பதிவுசெய்தன. நிதியியல் கணக்கில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கான வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் தொடர்ந்தும் தேறிய வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தவேளையில் இம்மாத காலப்பகுதியில் ஏற்பட்ட சிறிதளவு தேறிய உட்பாய்ச்சலின் காரணமாக அரச பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தேறிய வெளிப்பாய்ச்சலில் மாற்றமொன்று அவதானிக்கப்பட்டது.

Pages

சந்தை அறிவிப்புகள்