Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2018 யூலையில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், கடந்த ஆண்டில் காணப்பட்ட குறைந்த அடிப்படை மற்றும் உணவல்லா வகைப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் பிரதானமாக தூண்டப்பட்டு ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 யூனின் 2.5 சதவீதத்திலிருந்து 2018 யூலையில் 3.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 யூனின் 5.3 சதவீதத்திலிருந்து 2018 யூலையில் 5.1 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. 

​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டில் ஊழிய சேம நிதியத்தின் பங்குரிமை மூலதன முதலீடு தொடர்பான தௌிவுபடுத்தல்

அண்மைக்கால ஊடக அறிக்கைகள் மற்றும் ​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் தாய்க் கம்பனியான ஈஸ்ட் வெஸ்ட் புறப்பட்டீஸ் பிஎல்சியினால் கொழும்பு பங்குச் சந்தைக்கான கம்பனி வௌிப்படுத்தல்கள் மீது இலங்கை மத்திய வங்கியின் அவதானம் வேண்டப்படுகின்றது.

ஊழிய சேம நிதியத் திணைக்களமானது ​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் பங்குகளை எச்பிஎல் புறப்பட்டீஸ் குழுமத்திற்கு விற்பனை செய்வதற்கு ​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் தலைவரினால் அனுப்பப்பட்ட கடிதத்தை 2018 யூன் மாதத்தில் பெற்றுக்கொண்டது. தொடா்ச்சியாக ஊழிய சேம நிதியமானது இது தொடா்பாக பல கலந்துரையாடல்களை வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெடுடன் நடாத்தியது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது ​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் பங்குகளில் ஊழிய சேம நிதியத்தின் பங்குரிமை மூலதனம் தொடா்பான மதிப்பீடொன்றினைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்ததுடன் அம்மதிப்பீட்டுச் செயன்முறைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

வங்கியொன்றின் பணிப்பாளர் உரித்தாண்மையைக் கொண்டிருக்கும் (கரிசனைக்குரிய) நிறுவனமொன்றிற்கு கடன் வழங்குதல் தொடர்பான தெளிவுபடுத்தல்

கடந்த அண்மைக் காலத்தில் அச்சிடப்பட்ட மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் எழுப்பப்பட்ட கரிசனைகளைத் தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கியானது, உரிமம் பெற்ற வங்கியொன்றின் (வங்கி) பணிப்பாளரொருவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உரித்தாண்மையைக் கொண்டிருக்கும் நிறுவனம் அல்லது நபருக்கு கடன் வழங்குதல் தொடர்பான ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை நடைமுறைகளைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது. 

இலங்கை கொள்வனவு முகாமையாளா் சுட்டெண் அளவீடு - 2018 யூலை

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட 57.6 சுட்டெண் புள்ளிகளிலிருந்து  2018 யூலையில்  57.2 சுட்டெண் புள்ளிகளுக்கு குறைவடைந்தது. தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட சிறிதளவான மெதுவடைதலானது, விசேடமாக உணவு மற்றும் குடிபானம் மற்றும் புடவை மற்றும் அணியும் ஆடைகள் துறையில் காணப்பட்ட அதிகளவிலான தொழிலாளர்களின் புரள்வு காரணமாக திறனற்ற தொழிலாளர்களின் பிரதியிடுதலில் காணப்பட்ட இடர்பாடுகளின் காரணமாக தொழில்நிலையின் மெதுவடைதலினால் உந்தப்பட்டது. மேலும், 2018 யூலையில் புதிய கட்டளைகள் சிறிதளவில் மெதுவடைந்திருந்தது. எவ்வாறாயினும், உற்பத்தி மற்றும் கொள்வனவுகளின் இருப்பு விசேடமாக இரசாயன மற்றும் மருந்தாக்கல் பொருட்களின் உற்பத்தியில் அடுத்த மூன்று மாத அளவில் எதிர்பார்க்கப்படுகின்ற சாதகமான தோற்றப்பாடு காரணமாக மேம்பாடொன்றினை காண்பித்தது. இவ்  வேளையில், நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரமானது வழக்கமாக பொருளாதாரத்தின் குறுகிய காலத்தில் நடவடிக்கைகளின் விரிவாக்கத்தின் துரித வளர்ச்சியை குறித்துக்காட்டுகின்றது.

முதனிலை வணிகா் தொடா்பான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கை - பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசோி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை தொடா்ந்து மேற்கொள்ளும் வகையில் 2018 ஓகத்து 15ஆம் திகதி மு.ப 10 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி அதன் முதனிலை வணிகா் வியாபாரம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இடைநிறுத்தலை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது.

இவ்வொழுங்குபடுத்தல் நடவடிக்கைகளானது அரச பிணையங்களுக்கான முதனிலை ஏலங்களுக்கான பான் ஏசியா பாங்கிங் கோப்ரேசன் பிஎல்சியின் அணுகுமுறையினை கட்டுப்படுத்துகின்றது என்பதை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்த விரும்புகின்றது. இது பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் ஏனைய நடவடிக்கைகள்/ பணிகளில் எந்தவித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது.

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களைத் தற்போதைய மட்டங்களிலேயே பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2018 ஓகத்து 02ஆம்; நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்தது. இதற்கமைய இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் முறையே 7.25 சதவீதமாகவும் 8.50 சதவீதமாகவும் தொடர்ந்தும் காணப்படும். நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்க மட்டத்தில் உறுதிப்படுத்துவதனையும் அதன் மூலம் இலங்கைப் பொருளாதாரத்தின் அதிகரித்த மற்றும் நீடித்த வளர்ச்சி உத்வேகத்திற்கு பங்களிப்பு செய்வதற்குமான நோக்குடன் இசைந்து செல்லும் வகையில் சபையின் தீர்மானம் அமைந்துள்ளது. சபையானது அதன் தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார அபிவிருத்திகளை கரிசனையுடன் கண்காணித்துள்ளது.

Pages

சந்தை அறிவிப்புகள்