Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

அரச பிணையங்களில் செய்யப்பட்ட ஊழியர் சேம நிதியக் கொடுக்கல்வாங்கல்களின் பரீட்சிப்புக்கள் தொடர்பான குறிப்பிட்ட ஊடக அறிக்கைகளை தெளிவுபடுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கை

இலங்கை மத்திய வங்கி, அண்மையில் நடைபெற்ற நாணயச் சபையின் கூட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிழையான தகவல்களைத் தாங்கி வெளிவந்த குறிப்பிட்ட ஊடக அறிக்கைகள் தொடர்பில் அதன் நிலையினைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது. 

கண்டறியப்பட்ட விடயங்கள் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் நோக்குடன், அரச பிணையங்களில் செய்யப்பட்ட ஊழியர் சேம நிதியக் கொடுக்கல்வாங்கல்களின் பரீட்சிப்புக்கள் மீதான அறிக்கை தொடர்பில் நாணயச் சபை கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது. தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுமிடத்து, இலங்கை மத்திய வங்கியின் உள்ளக நடவடிக்கை முறைமையின் நியதிகளுக்கிணங்க, வங்கியின் எந்தவொரு அலுவலருக்கெதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு நாணயச் சபை தீர்மானித்திருக்கிறது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 திசெம்பர்

2016 திசெம்பரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் கலப்பானதாக காணப்பட்டது.  இறக்குமதி செலவினத்தில் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பின் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்து 2016 திசெம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருவாய்களில் காணப்பட்ட வளர்ச்சியை மிகக்கூடுதலாக எதிரீடு செய்தது. சுற்றுலா மற்றும் தொழிலாளர் பணவலுப்பல்களிலிருந்தான வருவாய்கள், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், இம்மாத காலப்பகுதியில் ஆரோக்கியமான வீதமொன்றில் சாதகமான விதத்தில் வளர்ச்சியடைந்தன. அரச பிணையங்கள் சந்தை திசெம்பரில் தேறிய வெளிப்பாய்ச்சல் ஒன்றை காட்டிய வேளையில் கொழும்பு பங்கு பரிவர்த்தனைக்கு சில உட்பாய்ச்சல்கள் ஏற்பட்டமையையும் அவதானிக்க முடிந்தது.

முழுவடிவம்

Monetary Policy Review - No. 2 of 2017

As per the provisional estimates of the Department of Census and Statistics (DCS), the Sri Lankan economy grew by 4.4 per cent in real terms during 2016 compared to the growth of 4.8 per cent in 2015. Within this annual growth, Industry related activities grew notably by 6.7 per cent driven by construction related activities, while Services related activities grew by 4.2 per cent mainly with the expansion of financial services, insurance and telecommunications. However, Agriculture related activities contracted by 4.2 per cent in 2016, impacted by supply side disruptions on account of floods in the second quarter and drought conditions during the final quarter of 2016. In spite of challenging external factors such as adverse weather conditions and global developments, an acceleration of growth was observed towards end 2016 with the last quarter of 2016 recording a growth of 5.3 per cent, partly supported by the base effect.

2017 பெப்புருவரியில் பணவீக்கம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைகக் ளத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 சனவரியின் 6.5 சதவீதத்திலிருந்து 2017 பெப்புருவரியில் 8.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2017 பெப்புருவரியின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்தன. அவதானிக்கப்பட்ட மாதாந்த விலை அதிகரிப்பிற்குப் புறம்பாக, 2016 பெப்புருவரியில் காணப்பட்ட தாழ்ந்த தளமும் 2017 பெப்புருவரியில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் கூடியளவிற்கு அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்களவிற்கு பங்களித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2017 சனவரியில் 4.6 சதவீதத்திலிருந்து 2017 பெப்புருவரியில் 5.1 சதவீதத்திறகு; அதிகரித்தது. 

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 பெப்புருவரி

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் பெப்புருவரியில் 57.1 கொண்ட சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 சனவரியுடன் ஒப்பிடும் போது 0.9 சுட்டெண் புள்ளிகள் அதிகரிப்பை காட்டியது. இது, புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண்ணில் பிரதிபலிக்கப்பட்டவாறு  வருகின்ற புத்தாண்டுகால பருவத்திற்கான அதிகரிக்கும் கட்டளைகள் பெரிதும் காரணாமாக இருந்ததோடு பெப்புருவரி 2017ல் தயாரிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக விரிவாக்கத்தினை குறித்துக்காட்டியது. நீடிக்கும் நிரம்பலர் வழங்கல் நேரத்தில் பிரதிபலிக்கப்பட்டவாறு சனவரி மாதத்தில் சேர்த்துக்கொள்ளப்படட இருப்புகளின் பாவனை மற்றும் மூலப்பொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதங்கள் கொள்வனவுகள் இருப்பு துணைச் சுட்டெண் பெப்புருவரியில் குறைவடைந்தமைக்கு காரணமாக அமைந்தது. தொழில்நிலைச் துணைச்சுட்டெண் அதிகரித்திருந்த வேளையில் உற்பத்தி துணைச்சுட்டெண் மாற்றமடையாமல் காணப்பட்டது. பெப்புருவரி மாதத்தில் காணப்பட்ட குறைந்த வேலைநாட்கள் அதிகரிக்கும் கேள்விகளுக்கு ஏற்ற வகையில் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு ஒரு தடையாக காணப்பட்டது.

ரூபா 1 நாணயக் குத்தியினதும் ரூபா 5 நாணயக் குத்தியினதும் உலோகத்தினை/ கலப்பு உலோகத்தினை மாற்றுதல்

புதிதாக சுற்றோட்டத்திற்கு விடப்படவுள்ள ரூபா 1 நாணயக் குத்தியினதும் ரூபா 5 நாணயக் குத்தியினதும் உலோகங்கள்/கலப்பு உலோகங்கள் பித்தளை முலாமிடப்பட்ட உருக்கிலிருந்து (தங்க நிறம்) துருப்பிடிக்காத உருக்கிற்கு (வெள்ளி நிறம்) மாற்றப்பட்டிருப்பது பற்றி பொதுமக்களுக்கு இத்தால் அறியத்தரப்படுகிறது. 5 ரூபா நாணயக் குத்தியின் விளிம்பிலுள்ள எழுத்துக்கள் புதிய துருப்பிடிக்காத உருக்கிலான குத்தியில் நீக்கப்பட்டுள்ளன. பரிமாணம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட மற்றைய அனைத்து விபரங்களும் 2005 இலிருந்து சுற்றோட்டத்திற்கு விடப்பட்ட ரூபா 1 மற்றும் ரூபா 5 நாணயக் குத்திகளை ஒத்ததாகவே தொடர்ந்தும் இருக்கும். 

குறிப்பிட்ட புதிய நாணயக் குத்திகள் கொடுப்பனவிற்காக இலங்கையில் சட்ட ரீதியான நாணயமாக இருக்குமென்பதுடன் சுற்றோட்டத்திலிருக்கும் பொழுது அவை இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பாகவும் இருக்கும்.

 

 

Pages