நாணயக் கொள்கை மீளாய்வு - இல. 08 2018

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2018 திசெம்பர் 27இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அதன் தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதெனத் தீர்மானித்துள்ளது. அதன்படி மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வீதம் என்பன முறையே 8.00 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் காணப்படும். பொருளாதாரமானது அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை அடைந்து கொள்வதனை இயலுமைப்படுத்தும் வகையில் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதிப்படுத்துகின்ற பரந்த நோக்குடன் உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு நிதியியல் சந்தை என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் அதேபோன்று வெளிநாட்டுப் பொருளாதாரச் சூழலினையும் நாணயச் சபையானது கவனத்திற் கொண்டுள்ளது. 

முழுவடிவம்

Published Date: 

Friday, December 28, 2018