இலங்கை மத்திய வங்கி, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளத்தினை அடிப்படையாகக் கொண்ட பிரயோகங்க;டாக பல்வேறு வகையான நிதியியல் மோசடிகளும் ஏமாற்று வேலைகளும் தொழிற்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பான தகவல்களைப் பெற்றிருக்கிறது. அண்மைக் காலமாக இவ்வகையிலான ஏமாற்று நடவடிக்கைகள் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய ஏமாற்று நடவடிக்கைகளில் பெரும்பாலானவை பொதுமக்களைக் கவரதத்தக்க இலகுவான கடன் திட்டங்க;டாக மேற்கொள்ளப்படுகின்றன. அத்தகைய மோசடியான கடன் ஒப்புதல் செய்முறைகளின் போது மோசடியாளர்கள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு இலக்கம் மற்றும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கம் போன்ற வாடிக்கையாளர்களின் இரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் பொதுமக்களை வசீகரித்துக் கொள்வர். அதன் பின்னர் மோசடியாளர்கள் அத்தகைய இரகசியத் தகவல்களை வாடிக்கையாளர்களின் கணக்குகளை அணுகுவதற்கும் பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளரின் பணத்தினை திருடிக் கொள்வர்.