கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிப்பதற்கு உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி வழிமு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிப்பதற்கு வசதிசெய்யும் பொருட்டு, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்கும் பொருட்டு பல்வேறு எண்ணிக்கையிலான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானமெடுத்திருக்கின்றது. இந்த வழிமுறைகள், தேவைப்படுகின்ற உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகளுக்கு ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளை தளர்த்தல் மற்றும் திரவத்தன்மை ஆதரவளிப்பினை வழங்குதல் போன்றவற்றை உள்ளடக்குகின்றது.

அதன்படி, நாணயச்சபையானது அவசர நியதிகளில் கொரோனா வைரஸ் (கொவிட் - 19) இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பின்வரும் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளை வழிமுறைகளாக தளர்த்துகின்றது.

  1. வைப்பாளர்களினால் தீடீரென மேற்கொள்ளப்பட்ட பணமீளப்பெறுகைகள் மற்றும் கொடுகடன் கட்டணத்தின் மீளச் செலுத்துகையின் தாமதம் என்பவற்றின் காரணமாக உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் அல்லது சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் முகம்கொடுக்கின்ற திரவத்தன்மை அழுத்தத்தினைக் குறைப்பதற்கு தவணை வைப்புக்கள், சேமிப்பு வைப்புக்கள் மற்றும் கடன்கள் என்பனவற்றின் மீதான திரவத்தன்மை சொத்து தேவைப்பாட்டின் பராமரிப்பினைக் குறைத்தல்.
  2. குறைந்தளவு மைய மூலதனத் தேவைப்பாடுகளுக்கு இணங்கிச்செல்வதற்கு ஒரு வருடகால நீடிப்பு. அதன்படி, ரூ.2 பில்லியன் மற்றும் ரூ.2.5 பில்லியன் வரையிலான மூலதன விரிவாக்கத்திற்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 2020.01.01 மற்றும் 2021.01.01 என்ற நேரவரையறை முறையே 2020.12.31 மற்றும் 2021.12.31 வரை நீடிக்கப்படுகின்றது.
  3. 2020.07.01 மற்றும் 2021.07.01 அன்று உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் குறைந்தளவு மூலதனப் போதுமானளவு தேவைப்பாடுகளின் விரிவாக்கத்தினை முறையே ஒரு வருட காலத்திற்கு 2021.07.01 மற்றும் 2022.07.01 இற்கு மேலும் பின்தள்ளிப்போடுதல்.
  4. மேலும், நியதிச்சட்டத் திரட்டுக்களினை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவினை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன், அதன்படி, அத்தகைய உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் அல்லது சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் சாதாரண வியாபாரச் செயற்பாடுகள் ஆரம்பித்து இரண்டு வார காலப்பகுயினுள் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்திற்கு நியதிச்சட்ட திரட்டுக்களை சமர்ப்பிக்கும்படி அனைத்து உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு அறியத்தரப்படுகின்றது.

மேலும், உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகளுக்கான பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தினை உறுதிசெய்யும் பொருட்டு அத்தகைய உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகளின் அவசர திரவத்தன்மை தேவைப்பாடுகளை வசதிப்படுத்துவதற்கு உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகளுக்கு இலங்கை வைப்பு காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவளிப்பு திட்டத்தின் கீழ் திரவத்தன்மை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முறைமையினுள் மேலதிக திரவத்தன்மையை உட்புகுத்துவதற்காக மேலும் பல வழிமுறைகள் திரவத்தன்மையை விரிவுபடுத்துவதற்கு தற்பொழுது கவனத்திற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இதற்கு மேலதிகமாக, வங்கியல்லா நிதி நிறுவனங்கள் அவர்களுடைய செயற்பாட்டு செலவினை குறைத்து கொரோனா வைரஸ் (கொவிட் - 19) இனால் பாதிக்கப்பட்ட தேவையுள்ள மக்களுக்கு அவர்களுடைய வியாபாரங்களை மீளெழுச்சி பெறச்செய்வதற்கு நன்மைகளை வழங்குவதற்கு அனைத்து சாதகமான வழிமுறைகளையும் எடுக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

இலங்கை மத்திய வங்கியானது அண்மைக்கால சந்தை அபிவிருத்திகளுடன் அனைத்து நிதியியல் நிறுவனங்களின் செயற்பாடுகளையும் உன்னிப்பாக கண்காணிக்கின்றதுடன் நாட்டின் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை பராமரிப்பதற்கு தேவையான மேலதிக வழிமுறைகளை எடுக்கும் வேளையில், பொதுமக்கள் அதிகாரிகளினால் எடுக்கப்படுகின்ற முன்முயற்சிகளை ஆதரவளிக்கும்படி வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

Published Date: 

Sunday, April 12, 2020