Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி அதன் 11 ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை நடத்தியிருக்கிறது

இலங்கை மத்திய வங்கி அதன் 11 ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை 2018 திசெம்பர் 07ஆம் நாளன்று ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடத்தியது. இம்மாநாடானது சமகால பேரண்டப் பொருளாதார கொள்கை தொடர்பான கோட்பாட்டு மற்றும் அனுபவ ரீதியான ஆராய்ச்சியினை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் பல்லினத்தன்மைச் சூழலிலிருந்து வருகை தருகின்ற ஆராய்ச்சியாளர்கள் தாம் கண்டறிந்த விடயங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பமொன்றினை வழங்குவதனையும் நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. இவ்வாண்டின் மாநாடானது 'பணவீக்க இலக்கிடல் மற்றும் மத்திய வங்கியின் சுயாதீனம், பொறுப்புக்கூறும்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை" என்ற தொனிப்பொருளின் கீழ் நடாத்தப்பட்டது. 

ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட் வைப்பாளர்களுக்கு இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை துணையளித்தல் திட்டத்தின் கீழான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கு அமைய நிதி வியாபாரத்தினை மேற்கொள்வதற்காக ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட உரிமம் 2018.07.25ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச்செய்யப்படுள்ளது.

இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை துணையளித்தல் திட்டத்தின் கீழ் ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பாளர்களுக்கு நட்டஈட்டினைக் கொடுப்பனவு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கை வைப்புக் காப்புறுதி ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளுக்கு அமைவாக நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும். விண்ணப்ப பிரமாணம் தொடர்பான அறிவுறுத்தல்கள் அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிவிக்கப்படும்.

54வது தென்கிழக்காசிய மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாடு/ உயர்மட்ட ஆய்வரங்கு மற்றும் தென்கிழக்காசிய மத்திய வங்கி ஆளுநர் சபையின் 38வது கூட்டம்

இலங்கை மத்திய வங்கியானது 54வது தென்கிழக்காசிய மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாடு/ உயர்மட்ட ஆய்வரங்கு மற்றும் தென்கிழக்காசிய மத்திய வங்கி ஆளுநர் சபையின் 38வது கூட்ட நிகழ்வினை 2018 நவெம்பர் 29 தொடக்கம் திசெம்பர் 02 வரை கொழும்பில் நடைபெறுவதற்கு அனுசரணை வழங்கியது. இந்நிகழ்வில் தென்கிழக்காசிய உறுப்பு மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் மற்றும் பேராளர்கள் அத்துடன் நாணய மேலாண்மைச் சபையினரும்  பங்கேற்றனர். பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவ பணிப்பாளர் மிட்சுஹிரோ புருசாவா முதன்மைப் பேச்சாளராக கலந்துகொண்டார்.

தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் நிலையமானது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நிதியியல், நாணய மற்றும் வங்கித்தொழில் கருமங்களில் புரிந்துணர்வினை பாரியளவில் ஊக்குவிப்பதற்கு முன்னணியான பங்கொன்றை ஆற்றுகின்றது. 1982இல் நிறுவப்பட்ட தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் நிலையமானது கற்றல் நிகழ்ச்சித் திட்டங்கள், ஆராய்ச்சிப் பணி மற்றும் வலையமைப்பாக்கம் என்பன ஊடாக ஆசிய பசுபிக்கின் மத்திய வங்கிகளுக்கும் நாணய மேலாண்மைச் சபைகளுக்கும் பணியாற்றுகின்றது. 

அண்மைய தரமிடல் தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் தரமிடல் முகவர்களுடனான சர்ச்சை

இலங்கையின் நீண்டகாலத் தரமிடலை ‘B+’ (உறுதியான தன்மை) இலிருந்து ‘B’ (உறுதியான தன்மை) தரம் குறைப்பதற்காக 2018 திசெம்பர் 03ஆம் நாளன்று பிட்ஜ் ரேட்டிங்கினாலும் 2018 திசெம்பர் 4ஆம் நாளன்று ஸ்டான்டட் அன்ட் புவரினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நாட்டின் பேரண்டப் பொருளாதார அடிப்படைகளின் மீதான ஊர்ஜிதப்படுத்தப்படாத அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 செத்தெம்பர்

2018 செத்தெம்பரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை அழுத்தமொன்றிற்கு உட்பட்டது. வர்த்தகக் கணக்கில் காணப்பட்ட விரிவடைந்த பற்றாக்குறை மற்றும் சொத்துப்பட்டியல் முதலீடுகள் வெளிச்செல்வதற்கு காரணமாக அமைந்த ஐ.அ.டொலர் வலுவடைந்தமை என்பன இம்மாதத்தில் சென்மதி நிலுவையினை மோசமாகப் பாதித்தன. ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்து நான்காவது மாதமாக ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சிக் காணப்பட்ட போதும் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட உயர்ந்த வளர்ச்சி ஏற்றுமதி வருவாய்களின் அதிகரிப்பை விஞ்சிக் காணப்பட்டது. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தையின், வெளிநாட்டு முதலீடுகள் உலகளாவிய நிதியியல் சந்தைகள் உறுதியடைந்தமைக்கு பதிலிறுத்தும் விதத்தில் வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. அதேவேளை, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும் செத்தெம்பர் மாதத்தில் வெளிநாட்டு முதலீடுகளில் ஒரு சில வெளிப்பாய்ச்சல்களைக் காட்டியது. இதன்விளைவாக ஆண்டின் முதல் எட்டுமாத காலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராக 5.3 சதவீதத்தினால் தேய்வடைந்த இலங்கை ரூபா செத்தெம்பரில் மேலும் 4.6 சதவீதத்தினால் தேய்வடைந்து உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் மீது அழுத்தமொன்றைப் பிரதிபலித்தது.

இலங்கை சமிக்ஞைப் படையணியின் 75ஆவது ஆண்டு நிறைவினை குறிக்கும் முகமாக ஞாபகார்த்த நாணயக் குத்தியொன்று வெளியிடப்படுகின்றது

இலங்கை மத்திய வங்கி, இலங்கை சமிக்ஞை படையணியின் 75ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் முகமாகவும் 75 ஆண்டு காலப்பகுதிக்கு மேலாக நாட்டிற்கு அது ஆற்றிய அரும் பணிக்கு அங்கீகாரமளிக்கும் விதத்திலும் ரூ.10 முகப்புப் பெறுமதியினைக் கொண்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த நாணயக் குத்தியொன்றினை வெளியிட்டிருக்கின்றது. முதலாவது நாணயக் குத்தி உத்தியோக பூர்வமாக மாண்புமிகு பிரதம மந்திரியும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களினால் 2018 நவெம்பர் 27ஆம் நாளன்று கையளிக்கப்பட்டது. 

இந்நாணயக் குத்தியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதுடன் ஏற்கனவே சுற்றோட்டத்திலுள்ள ஏனைய நாணயத் தாள்கள் மற்றும் குத்திகளுடன் சேர்ந்து கொடுப்பனவுகளுக்கு பயன்படுத்தப்படக்கூடியதாகவிருக்கும்.

Pages