Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான கொடுகடன் ஆதரவு

நாட்டில் பொருளாதார வளர்ச்சியினை துரிதப்படுத்தும் நோக்குடன் வங்கித்தொழில் துறையின் தகைமையுடைய சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிக் கடன் பெறுநர்களுன்கென விசேட கொடுகடன் ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, வங்கியல்லா நிதி நிறுவனங்கள் துறை கடன் பெறுநர்களுக்கும் நன்மைகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தினைக் கருத்திற்கொண்டு வங்கியல்லா நிதி நிறுவனங்களுக்கும் இதனையொத்த திட்டமொன்றினை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. 

அதற்கமைய, இலங்கை மத்திய வங்கியானது பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான கொடுகடன் ஆதரவு என்ற 2020ஆம் ஆண்டின் 01ஆம் இலக்கச் சுற்றறிக்கையில் குறித்துரைக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் 2019.12.31 அன்று உள்ளவாறு செயலாற்றமற்றவையாக ஏற்கனவே வகைப்படுத்தப்பட்ட வருமானம் ஈட்டுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற தனிப்பட்டவர்களுக்கும் நிறுவனங்களுக்குமென விசேட கொடுகடன் ஆதரவுத் திட்டமொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. 

நாணயக் கொள்கை மீளாய்வு: இல.2 - 2020

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 மாச்சு 04ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 6.50 சதவீதம் மற்றும் 7.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கும் இதன்மூலம் அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்வதற்கும் தீர்மானித்தது. சபையானது, உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தை அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆய்வு செய்தமையினைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது. பணவீக்கத்தினை 4–6 சதவீத வீச்சிற்குள் பேணும் நோக்குடன் நாணயச் சபையின் தீர்மானம் இசைவானதாகக் காணப்படும் அதேவேளையில் இது நடுத்தர காலத்தில் பொருளாதார வளர்ச்சி தனது உள்ளாற்றலை எய்துவதற்கு ஆதரவளிக்கும்.  

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த பணவீக்கம் 2020 பெப்புருவரியில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013ஸ்ரீ100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 சனவரியின் 5.7 சதவீதத்திலிருந்து 2020 பெப்புருவரியில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, 2019 பெப்புருவரியில் நிலவிய தாழ்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கமே ஒரே காரணமாக அமைந்திருந்தது. 2020 பெப்புருவரியில் உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 14.7 சதவீதத்தில் அமைந்திருந்த வேளையில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2.8 சதவீதத்தில் பதிவுசெய்யப்பட்டது. 

ஆண்டுச் சராசரியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 சனவரியின் 4.5 சதவீதத்திலிருந்து 2020 பெப்புருவரியில் 4.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி - 2019 இரண்டாம் அரையாண்டு

இலங்கை மத்திய வங்கியினால் தொகுக்கப்பட்ட கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி 2019இன் இரண்டாம் அரையாண்டுப்பகுதியில் 138.9 இனை அடைந்து 2018இன் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 10.4 சதவீதம் கொண்ட அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்திருக்கிறது. காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்து மூன்று துணைக் குறிகாட்டிகளான அதாவது வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் துணைக் குறிகாட்டிகள் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்திருக்கின்றன. 

வதிவிட காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் மிகஉயர்ந்த அதிகரிப்பான 10.7 சதவீதத்தினைப் பதிவுசெய்த வேளையில் வர்த்தக காணி மதிப்பீட்டுக் குறிக்காட்டியும் கைத்தொழில் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி இரண்டும் 10.3 சதவீதத்தினால் அதிகரித்தன. அதேவேளைஇ 2019இன் முதலரையாண்டுப் பகுதியிலிருந்து 2019 இரண்டாம் அரைக்காலப்பகுதியில் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி 5.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

2020 சனவரியில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் அதிகரித்திருக்கிறது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 திசெம்பரின் 6.2 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 7.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் காணப்பட்ட பொருட்களினது விலைகளின் மாதாந்த அதிகரிப்பே காரணமாகும். உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2019 திசெம்பரின் 8.6 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 13.7 சதவீதத்திற்கு கணிசமாக அதிகரித்தது. இது 2017 நவெம்பருக்குப் பின்னர் ஏற்பட்ட மிக உயர்ந்ததொரு அதிகரிப்பாகும். மேலும், 2020 சனவரியில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 3.0 சதவீதத்தில் காணப்பட்டது.

முழுவடிவம்

இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்தினைத் திரட்டுவதனையும் வெளியிடுவதனையும் நிறுத்துதல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்தினைத் திரட்டுவதனையும் வெளியிடுவதனையும் 2020 யூலை 01ஆம் நாலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நிறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கிறது. இத்தீர்மானமானது, உள்நாட்டு நிதியியல் சந்தையில் கடன் சாதனங்களுக்கான அடித்தள அளவுக்குறியீடாக இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் போதுமானளவிற்குப் பயன்படுத்தப்படாமை, இலண்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் உட்பட, வழங்கல் வீதங்களின் திரட்டலையும் வெளியிடுதல்களையும் உலகளாவிய போக்கு கட்டம் கட்டமாக கைவிட்டு வருகின்றமை, நீண்ட காலப்பகுதிக்கான வங்கிகளுக்கிடையிலான சந்தை அளவுகள் மிக மெலிந்து காணப்படும் சூழ்நிலையொன்றில் அநேக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் வழங்கல் வீதங்களை அறிக்கையிடுகின்றமையினை நிறுத்திவிடுமாறு விடுத்த கோரிக்கைகள் மற்றும் உள்நாட்டு நிதியியல் சந்தையில் மாற்று அடித்தள அளவுக்குறியீட்டு வட்டி வீதங்கள் கிடைக்கத்தக்கதாகவுள்ளமை என்பனவற்றைப் பரிசீலனையில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

Pages

செய்தி வெளியீடுகள்

சந்தை அறிவிப்புகள்