கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்காக மத்திய வங்கி ரூ.60 பில்லியனுக்கும் கூடுதலான தொழிற்படு மூலதனக் கடன்களுக்கு ஒப்புதலளித்திருக்கிறது

2020 யூன் 10ஆம் திகதியுடன் முடிவடைந்த இவ்வார காலப்பகுதியில் ரூ.6,978 மில்லியன் தொகை கொண்ட 2,066 புதிய கடன்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலுடன் 2020 யூலை 10ஆம் நாள் உள்ளவாறு இலங்கை மத்திய வங்கி சௌபாக்கியா கொவிட்-19 புத்துயிர்ப்பு வசதியின் கீழ் ரூ.60,250 மில்லியன் கொண்ட 22,306 கடன்களுக்கு ஒப்புதலளித்தது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் 2020 யூலை 09ஆம் நாள் உள்ளவாறு நாடளாவிய ரீதியில் 13,333 கடன்பாட்டாளர்களிடையே ரூ.30,526 மில்லியன்களைப் பகிர்ந்தளித்துள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் இலங்கை மத்திய வங்கி கொவிட்-19 தொற்றின் மூலம் மோசமாகப் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு 4 சதவீத வட்டியில் (ஆண்டிற்கு) உரிமம்பெற்ற வங்கிகளினூடாக தொழிற்படு மூலதனக் கடன்களை வழங்குவதற்காக சௌபாக்கியா கொவிட்-19 புத்துயிர்ப்பு கடன் திட்டமொன்றினை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மீளெழுச்சிப்படுத்துவதற்கு உதவியளிக்கப்படுகிறது. இக்கடன்திட்டமானது சுயதொழில் மற்றும் தனிப்பட்டவர்கள் உட்பட, ரூ.1 பில்லியனுக்கும் குறைவான ஆண்டு மொத்த புரள்வினைக் கொண்ட கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்குக் கிடைக்கத்தக்கதாக இருக்கும். ஆண்டு மொத்தப் புரள்வான இவ்வரையறை சுற்றுலா, ஏற்றுமதிகள் மற்றும் அதனுடன் தொடர்பான வசதி ஏற்பாட்டு வழங்கல்களுடன் தொடர்பான தொழில்களுக்கு ஏற்புடைத்தாகாது.

கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட தொழில்களும் தனிப்பட்டவர்களும் மேற்குறிப்பிடப்பட்ட கடன் திட்டங்களின் கீழ் தமது கடன் விண்ணப்பங்களை தொடர்பான வங்கிகளுக்கு 2020 ஓகத்து 31 வரை சமர்ப்பிக்கலாம்.

முழுவடிவம்

Published Date: 

Friday, July 10, 2020