இலங்கை மத்திய வங்கியானது தொடரேட்டு தொழில்நுட்பத்தின் (Blockchain Technology)அடிப்படையில் அமைந்த உங்களது வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் முன்னோடித் திட்ட வடிவமைப்புச் செயன்முறையினைத் தொடங்குகின்றது

இலங்கை மத்திய வங்கியானது தொடரேட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த உங்களது வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் முன்னோடித் திட்ட வடிவமைப்புச் செயன்முறையினைத் தொடங்குவதற்கு 2020 யூலை 7ஆம் திகதியன்று ஒப்பத்தங்களைக் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கையின் நிதியியல் பணிகளுக்கான சாத்தியமான நன்மைகளை இலங்கை மத்திய வங்கி 2018இல் இனங்கண்டு வங்கிகள் அதேபோன்று தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை என்பவற்றின் தன்னார்வ பங்கேற்புடன் தொடரேட்டு தொழில்நுட்பம் பற்றிய தொழிற்துறைகளுக்கிடையிலான ஆய்வுகளைத் தொடங்கியது. பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளர்களைத் தெரிந்துகொள்ளுங்கள் தீர்வொன்றினை உருவாக்கி இலங்கையின் தொடரேட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த நிதியியல் பணித் தீர்வுகளுக்கு வழியமைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது. பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுவதற்கான தொடரேட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த தீர்வுகளை உருவாக்குவதில் அனுபவமிக்க கம்பனிகளைத் தன்னார்வ அடிப்படையில் இக்கருத்திட்டத்துடன் இணையுமாறு இலங்கை மத்திய வங்கி விளம்பரப்படுத்தியது. பல எண்ணிக்கையான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கியானது சமகாலத்தில் நிகழத்தக்க விதத்தில் தொடரேட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த உங்களது வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் முன்னோடித் திட்ட வடிவமைப்பினை உருவாக்குவதற்கு மூன்று விண்ணப்பதாரிகளைத் தெரிவுசெய்தது.

தொடரேட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த உங்களது வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் முன்னோடித் திட்ட வடிவமைப்பினை உருவாக்குவதற்கு 17 வெளிநாட்டுக் கம்பனிகள் உட்பட 40 இற்கும் மேற்பட்ட கம்பனிகள் தனிப்பட்ட ரீதியாகவும் இணைந்தும் விண்ணப்பித்திருந்தன. பல்வேறு தெரிவுச் சுற்றுகளின் பின்னர் இலங்கையில் இம்முன்னோடி கருத்திட்டத்தினைப் பொறுப்பளிப்பதற்கு மூன்று விண்ணப்பதாரிகள் தெரிவுசெய்யப்பட்டனர். இணைந்த விண்ணப்பதாரிகளாக கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பாடசாலையுடன் ஒன்றிணைந்து சம்பத் வங்கி பிஎல்சியும், சுவீடனின் நோர்புளக் ஏபீ நிறுவனமும் அத்துடன் இணைந்த விண்ணப்பதாரிகளாக இரண்டும் இலங்கைக் கம்பனிகளான யால லப்ஸ் (பிறைவெட்) லிமிடெட் மற்றும் லீனியர்சிக்ஸ் (பிறைவெட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டன. தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையிலான ஒப்பந்தங்கள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய டபிள்யூ. டி லக்ஷ்மன் அவர்களின் பங்கேற்புடனும் வங்கியின் மூத்த வங்கி அலுவலர்களின் பிரசன்னத்துடனும் கைச்சாத்திடப்பட்டன. 

 முழுவடிவம்

Published Date: 

Tuesday, July 7, 2020