நாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 யூலை 08ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் 100 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 4.50 சதவீதத்திற்கும் 5.50 சதவீதத்திற்கும் குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. சந்தைக் கடன் வழங்கல் வீதங்களை மேலும் குறைப்பதனைத் தூண்டி அதன்மூலம் பொருளாதாரத்தின் உற்பத்தியாக்கத் துறைகளுக்கான கடன் வழங்கல் தீவிரமான முறையில் அதிகரிப்பதற்காக நிதியியல் முறைமையை ஊக்குவிப்பதனையும் நோக்கமாகக் கொண்டு சபை இத்தீர்மானத்திற்கு வந்திருக்கின்றது. இது, குறைக்கப்பட்ட பணவீக்க நிலைமைகளுள்ள சூழலில் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் அதேபோன்று பரந்த பொருளாதாரத்திற்கும் வலுப்படுத்தப்பட்ட ஆதரவினை வழங்கும். 

முழுவடிவம்

Published Date: 

Thursday, July 9, 2020