சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறத்தல் பற்றிய தெளிவூட்டல்

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறந்து பேணுவதில் வேண்டப்பட்ட உரிய விழிப்புக்கவனச் செயன்முறைகள் இலங்கையில் தொழிற்படுகின்ற வங்கிகள் மூலம் (அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள்) பின்பற்றப்படவில்லை என ஒரு சில அதிகாரிகளினாலும் நபர்களினாலும் தெரிவிக்கப்பட்ட/ முன்வைக்கப்பட்ட கருத்துக்களை/ கரிசனைகளை இலங்கை மத்திய வங்கி திட்டவட்டமாக நிராகரிக்கின்றது. 

கொவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கங்களை வெற்றிகொள்வதற்கான தேசிய முயற்சிக்கு உதவியினை நாடும் நோக்குடன் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 2020.04.08ஆம் திகதியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை வழங்குவதன் ஊடாக இலங்கை அரசாங்கமானது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் ஆலோசனையுடன் சிறப்பு வைப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சொல்லப்பட்ட ஒழுங்குவிதிகளில் குறித்துரைக்கப்பட்ட நடைமுறைசார் தேவைப்படுத்தல்களின் விதிவிலக்குகள், சாதாரண சூழ்நிலைகளின் கீழ் உள்முக முதலீட்டுக் கணக்கொன்றினூடாக அத்தகைய நிதியங்களை வழிபடுத்தாது சிறப்பு வைப்புக் கணக்கொன்றிற்கு நிதியங்களை நேரடியாக வரவு வைப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட வணிகரொருவரை அனுமதிக்கின்றன. சொல்லப்பட்ட ஒழுங்குவிதிகள், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகுவதிலிருந்து அதிகாரம்பெற்ற வணிகர்களை விலக்களிக்க முடியாது.

இவ்விடயம் தொடர்பில், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 7(6)ஆம் பிரிவானது அத்தகைய கொடுக்கல்வாங்கல்களை ஒழுங்குபடுத்துகின்ற எவையேனும் வேறு சட்டங்களுடன் சொல்லப்பட்ட கொடுக்கல்வாங்கலானது இணங்கி காணப்படுகின்றது என்பதனை திருப்திப்படுத்துவதற்கு நியாயமானளவில் அவசியம் காணப்படுகின்ற போது தகவல்களை/ ஆவணங்களை வழங்குவதற்கு அல்லது ஏதேனும் வெளிப்படுத்தலை செய்வதற்கு மூலதன கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நபரிடம் கோருவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களை வேண்டுகின்ற அதேவேளை வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 9(5)ஆம் பிரிவானது இலங்கை மத்திய வங்கியின் கண்காணித்தல் நோக்கங்களுக்காகவும் புள்ளிவிபர நோக்கங்களுக்காகவும் ஆறு வருடங்களைக் கொண்ட காலப்பகுதியொன்றிற்கு அத்தகைய வணிகர் ஈடுபட்ட ஏதேனும் வெளிநாட்டுச் செலாவணி கொடுக்கல்வாங்கல் மீதான வேண்டப்படுகின்ற தகவல்களைப் பேணுமாறு அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களை தேவைப்படுத்துகின்றது. 

மேற்குறித்தவற்றின் நோக்கில், இலங்கை மத்திய வங்கியானது சிறப்பு வைப்புக் கணக்குகள் மீதான ஒழுங்குவிதிகளின் சொல்லப்பட்ட விதிவிலக்குகள், பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒடுக்குதல் மீதான இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவினால் வழங்கப்பட்ட ஒழுங்குவிதிகள், விதிகள், வழிகாட்டல்கள் போன்றவற்றின் அத்துடன் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஏற்புடைய தேவைப்பாடுகளுடன் தொடர்புபடாதவை என்பதனை வலியுறுத்துகின்றது. ஆதலால், அத்தகைய சட்டங்கள் மற்றும் தேவைப்படுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றி சிறப்பு வைப்புக் கணக்குகள் திறந்து பேணப்படுவதற்கு வேண்டப்பட்டுள்ளன. 

 

Published Date: 

Friday, July 3, 2020