இலங்கை மத்திய வங்கியின் கொவிட்-19 நிவாரண வழிமுறைகள்: நாட்டிற்கும், பொருளாதாரத்திற்கும் உங்களுக்கும் நாம் எவ்வாறு உதவுகின்றோம்?

இவ்வூடக அறிக்கையானது கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரத்திற்கு, நிதியியல் முறைமைக்கு மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவளிப்பதற்காக 2020இன் இற்றைவரையிலும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்பாட்டு மற்றும் கொள்கை சார்ந்த வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்பூட்டுவதனை இலக்காகக் கொள்கின்றது. நாட்டின் உச்சமட்ட நிதியியல் நிறுவனம் என்ற ரீதியில் இலங்கை மத்திய வங்கியானது முடக்கல் காலப்பகுதியின் போது பொருளாதாரத்திற்கும் நிதியியல் முறைமைக்கும் அதன் முழுமையான அத்தியாவசிய பணி நோக்கெல்லையினையும் வழங்கியது. மத்திய வங்கியானது உலகளவிலான எதிர்பாராத இவ்விடையூறின் போது பொதுமக்கள் மீதான சுமையினை தளர்த்துவதற்கு முனைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்ட அதேவேளை பொருளாதார, விலை மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுவதற்கான அதன் சட்ட முறையான பொறுப்பாணை மீதான கவனத்தினை தக்கவைத்திருந்தது.

முழு வடிவம்

Published Date: 

Thursday, June 25, 2020