மாச்சில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் விரிவடைந்தன. நாட்டில் தயாரிப்பு நடவடிக்கைகளில் காணப்பட்ட வலுவான மீளெழுச்சியை எடுத்துக்காட்டுகின்ற விதத்தில் 2021 மாச்சில் தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஒன்பது மாதங்களிலேயே மிக உயர்ந்த அளவான 67.0 இனை அடைந்தது. 2021 மாச்சில் பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 62.1 சதவீதத்தினால் உயர்வடைந்து பணிகள் துறை தொடர்ந்து நான்கு மாதங்களாக விரிவடைந்தமையினை எடுத்துக்காட்டியது.















