கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 யூனின் 54.6 சதவீதத்திலிருந்து 2022 யூலையில் 60.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 யூனின்; 80.1 சதவீதத்திலிருந்து 2022 யூலையில் 90.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 யூனின் 42.4 சதவீதத்திலிருந்து 2022 யூலையில் 46.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.















திரு. அந்தோனி நிஹால் பொன்சேகா 2022 யூலை 27 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் ஆறு ஆண்டுகாலத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர், 2016 யூலை தொடக்கம் 2020 மே வரையிலும் 2022 மே தொடக்கம் 2022 யூலை வரையிலும் நாணயச் சபையில் பணியாற்றியிருந்தார்.
