Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 திசெம்பரில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2020 நவெம்பரில் 4.1 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பு மூலம் இது தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 நவெம்பரின் 10.3 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 9.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 நவெம்பரில் 1.6 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 2.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 திசெம்பரில் தொடர்ச்சியான மூன்றாவது மாதத்திற்காகவும் 4.6 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி அதன் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக சுற்றோட்டத்திற்கு விடப்படாத ஞாபகார்த்த நாணயக் குற்றியொன்றினை வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கியானது 1950 ஓகத்தில் அதன் தொழிற்பாடுகளைத் தொடங்கி இலங்கையின் சுபீட்சத்திற்கு அதன் தனித்துவமும் பெறுமதிவாய்ந்ததுமான பங்களிப்பின் 70 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. அதன் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இலங்கை மத்திய வங்கி, பின்வரும் முக்கிய அம்சங்களுடன் சுற்றோட்டத்திற்கு விடப்படாத ரூ.20 வகை ஞாபகார்த்த குற்றியொன்றினை வெளியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இலங்கை சுபீட்சச் சுட்டெண் – 2019

இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணானது  “பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல்” மற்றும் “சமூக-பொருளாதார உட்கட்டமைப்பு” ஆகிய துணைச் சுட்டெண்களின் சிறிதளவான வீழ்ச்சிகளுடன் 2018இன் 0.811 உடன் ஒப்பிடுகையில் 2019இல் 0.802 ஆகப் பதிவாகியது. அதேவேளை, “மக்கள் நலனோம்புகை” துணைச் சுட்டெண் ஆண்டுகாலப்பகுதியில் மேம்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் தொடர்புபட்ட கைத்தொழில்கள் மீது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் கசிவுத் தாக்கங்கள் தொழிலின்மையில் அதிகரிப்பொன்றினை ஏற்படுத்தியமை அத்துடன் 2019இன் பிந்திய பகுதியை நோக்கிய மோசமான வானிலை நிலைமைகளின் காரணமாக ஒப்பீட்டளவில் உயர்வான பணவீக்கம் என்பன பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண்ணில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு பற்றிய கரிசனைகளின் காரணமாக பொதுப் போக்குவரத்தினைக் குறைவாகப் பயன்படுத்தியமை சமூக-பொருளாதார உட்கட்டமைப்புச் சுட்டெண்ணில் வீழ்ச்சிக்கு முக்கிய ஏதுவாக அமைந்தது.

மக்களின் கல்வி, சுகாதார வசதிகள், செல்வம் தொடர்பான தரம் பற்றிய அம்சங்கள் மக்கள் நலனோம்புகைச் சுட்டெண்ணின் அதிகரிப்பிற்கு முக்கியமாக பங்களித்தவையாக விளங்கின.

வழிகாட்டல்: 2021ஆம் ஆண்டிற்கும் அதற்கும் அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள் பற்றிய அறிவித்தல்

வழிகாட்டல்: 2021ஆம் ஆண்டிற்கும் அதற்கும் அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மூலம் 2021 சனவரி 04ஆம் திகதியன்று அறிவிக்கப்படும்.

தற்போது நிலவுகின்ற கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் நிலைமையின் காரணமாக வழிகாட்டல் பற்றிய எடுத்துரைப்பு மெய்நிகராக இடம்பெறும் என்பதுடன் காணொளி 2021 சனவரி 04ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 11.00 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளம் ஊடாகக் கிடைக்கப்பெறும்.

இலங்கை மத்திய வங்கி ரூபாவின் அளவுக்கு மீறிய பெறுமானத் தேய்வினை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கின்றது

செலாவணி வீதத் தளம்பலின் அண்மைக்கால அதிகரிப்பு அடிப்படையற்றதும் ஏற்றுக்கொள்ளமுடியாததும் என மத்திய வங்கி கருதுகின்றது. அதற்கமைய, ஏனைய வழிமுறைகளுக்கு மத்தியில் மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டு செலாவணி சந்தையில் தளம்பல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதற்குப் பின்னர் பொருத்தமான தீவிர நடவடிக்கைகளை எடுக்கும். இந்நடவடிக்கைகள், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியினை தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதுடன் ஒன்றிணைந்து 2020 நவெம்பரில் அவதானிக்கப்பட்ட ஐ.அ.டொலர் ஒன்றுக்கு ரூ.185 இற்குக் கீழ் மட்டங்களை நோக்கி அடுத்துவரும் சில நாட்களினுள் ரூபா உயர்வடைவதை இயலச்செய்யும்.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2020 நவெம்பரில் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஒத்தோபரின் 5.5 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 5.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2019 நவெம்பரில் நிலவிய உயர்வான தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 ஒத்தோபரின் 10.6 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 9.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஒத்தோபரின் 1.5 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 1.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 ஒத்தோபரில் 6.2 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 6.3 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்