இலங்கை மத்திய வங்கி இலங்கையில் குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பீட்டின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியினை வெளியிடுகிறது

இலங்கையில் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பீட்டின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் ரூ.20 முகப்புப் பெறுமதியுடன்கூடிய சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியொன்றினை நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களித்த நிகழ்வினை அங்கீகரிக்கின்ற விதத்தில் இலங்கை மத்திய வங்கி வெளியிடுகிறது. இந்நாணயக்குற்றியானது இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கோரிக்கைக்கிணங்க வெளியிடப்படுகிறது. 

இலங்கையில் முதலாவது குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 1871இல் நடத்தப்பட்டதுடன் 2021ஆம் ஆண்டு 150ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது. 15 ஆவது குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பீட்டினை 2021இல் அதன் ஆண்டு நிறைவுடன் சேர்த்து நடத்துவதற்கு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக 15 ஆவது குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பீடு 2022 - 2023 வரை பிற்போடப்பட்டிருக்கிறது.

முழுவடிவம்

 

Published Date: 

Monday, March 21, 2022