தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மேயின் 45.3 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 58.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா ஆகிய இரு வகைகளினதும் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் 58.0 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 75.8 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் 34.2 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 43.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.
















