வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 திசெம்பர்

ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022இல் முதற் தடவையாக ஆண்டொன்றிற்கு ஐ.அ.டொலர் 13 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டு, 2021இல் பதிவுசெய்யப்பட்ட முன்னைய உயர்ந்தளவிலான பெறுமதியிலிருந்து 4.9 சதவீத அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. இம்மேம்பாடானது ஆடைகள், இரத்தினக்கற்கள், வைரங்கள் மற்றும் ஆபரணங்கள், பொறி மற்றும் பொறியியல் சாதனங்கள் மற்றும் பெற்றோலிய உற்பத்திகள் என்பன உள்ளடங்கலாக கைத்தொழில் ஏற்றுமதிகளிலிருந்ததான அதிகரித்த வருவாய்களின் பெறுபேறாகும். அதேவேளை, அவசரமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் 2022இன் பெரும்பாலான காலப்பகுதியில் சந்தையில் நிலவிய திரவத்தன்மை கட்டுப்பாடுகள் என்பவற்றின் விளைவாக மொத்த இறக்குமதிச் செலவினம் 2022இல் ஐ.அ.டொலர் 18,291 மில்லியனாக விளங்கி 11.4 சதவீத ஆண்டிற்காண்டு வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. இதன் விளைவாக, 2022இல் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறையானது 2021இல் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 8,139 மில்லியனிலிருந்து 2010இலிருந்தான தாழ்ந்த மட்டமான ஐ.அ.டொலர் 5,185 மில்லியனிற்கு சுருக்கமடைந்தது. ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையின் வீழ்ச்சிக்குப் பங்களித்த முக்கிய காரணிகள் வரைபடம் 1 இல் காட்டப்பட்டுள்ளன.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, January 31, 2023