கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு, செத்தெம்பரில் 57.8 இனைப் பதிவுசெய்தது. புதிய கட்டடவாக்க கருத்திட்டங்களின் நிலையான போக்கொன்றினால் ஆதரவளிக்கப்பட்டு, கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை இது எடுத்துக்காட்டுகின்றது. எனினும், தார் பற்றாக்குறையானது முக்கிய தடையாக விளங்கி, பல வீதி கட்டடவாக்க கருத்திட்டங்களில் தாமதத்தினை ஏற்படுத்தியது.
சாங்க நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களினால் முதன்மையாகத் துணையளிக்கப்பட்டு, புதிய கட்டளைகள் சுட்டெண் உயர்வான வேகமொன்றில் விரிவடைந்தது. அதேநேரத்தில், தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களின் பற்றாக்குறைகளை பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக எடுத்துக்காட்டிய போதிலும், நிலையான கருத்திட்ட கிடைப்பனவுகளினால் ஆதரவளிக்கப்பட்டு தற்போது இடம்பெறுகின்ற ஆட்சேர்ப்புக்களைப் பிரதிபலித்து, தொழில்நிலைச் சுட்டெண் மிதமான வீதமொன்றில் வளர்ச்சியடைந்தது. தற்போது இடம்பெறுகின்ற மற்றும் புதிதாக வழங்;கப்பட்ட கருத்திட்டங்களுக்கான பெறுகைத் தேவைப்பாடுகளைப் பிரதிபலித்து, கொள்வனவுகளின் அளவுச் சுட்டெண் உயர்வான வீதமொன்றில் அதிகரித்தது. அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரம் நிலையான வழங்கல் பக்க அழுத்தங்களைப் பிரதிபலித்து, மேலும் நீட்சியடைந்தது.
பொருட்கள் மற்றும் தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களின் கிடைக்கப்பெறுதலில் தற்போதைய சவால்களுக்கு மத்தியில், புதிதாக வழங்கப்பட்ட கருத்திட்டங்களினால் துணையளிக்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கான கட்டடவாக்க நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் சாதகமாகக் காணப்பட்டன.








