Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக ஆறு ஆண்டுகாலத்திற்கு திரு. அந்தோனி நிஹால் பொன்சேகா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்

திரு. அந்தோனி நிஹால் பொன்சேகா 2022 யூலை 27 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் ஆறு ஆண்டுகாலத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர், 2016 யூலை தொடக்கம் 2020 மே வரையிலும் 2022 மே தொடக்கம் 2022 யூலை வரையிலும் நாணயச் சபையில் பணியாற்றியிருந்தார்.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2022 யூனில் 58.9 சதவீதத்தைப் பதிவுசெய்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மேயின் 45.3 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 58.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா ஆகிய இரு வகைகளினதும் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் 58.0 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 75.8 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் 34.2 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 43.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.

நிலவுகின்ற அதிவிசேட பேரண்டப் பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கான சலுகைகள்

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுப் பரவலுடன் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு உதவுமுகமாக 2020 மாச்சு தொடக்கம் இலங்கை மத்திய வங்கி பல சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சட்டஇசைவு தாமதகாலம், கடன் மறுசீரமைப்பு/ மீள்அட்டவணைப்படுத்தல், கடன் அறவீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துதல், குறைந்த செலவில் மூலதனக் கடன்கள், சில வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்களுக்காக கட்டணங்கள் மற்றும் அறவீடுகளைத் தள்ளுபடி செய்தல் போன்றவற்றை இச்சலுகைகள் உள்ளடக்குகின்றன. தனியார் துறை ஊழியர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அத்துடன் சுற்றுலாத் துறை, போக்குவரத்து, தயாரித்தல், சேவைகள், கமத்தொழில், நிர்மாணம், ஆடை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட ஏற்பாட்டுச்சேவை வழங்குதல் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள ஏனைய வியாபாரங்கள் உள்ளடங்கலாக தனிப்பட்டவர்களுக்கு இச்சலுகைகள் வழங்கப்பட்டன. அதற்கமைய, கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட சட்ட இசைவு தாமதகாலத்தின் இறுதிக்கட்டம் 2021.12.31 அன்று முடிவடைந்த அதேவேளை சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்ட கடன் சலுகைக் காலத்தின் இறுதிக்கட்டம் 2022.06.31 அன்று முடிவுற்றது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 யூன்

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 யூனில் குறைவடைந்தன.

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், மாதத்திற்கு மாதம் அடிப்படையில் 2022 யூனில் வீழ்ச்சியடைந்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் பின்னடைவினை எடுத்துக்காட்டின. அதற்கமைய, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்திலிருந்து 6.2 சுட்டெண் புள்ளிக்களைக் கொண்ட வீழ்ச்சியுடன் 2022 யூனில் 44.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. வழங்குநர் விநியோக நேரம் தவிர அனைத்து துணைச் சுட்டெண்களிலும் ஏற்பட்ட குறைவினால் இது தூண்டப்பட்டிருந்தது.

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2022 யூனில் 40.3 சுட்டெண் பெறுமதிக்கு மேலும் வீழ்ச்சியடைந்தது. புதிய வியாபாரங்கள், தொழில்நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் துணைச் சுட்டெண்களில் வீழ்ச்சிகள் இதற்குப் பிரதான காரணமாக அமைந்தது.

இலங்கையில் மெய்நிகர் நாணயங்களின் (Virtual Currency) பயன்பாடு தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வு

பன்னாட்டு மற்றும் உள்நாட்டு சந்தைகளில் மெய்நிகர் நாணய பயன்பாட்டுடன் தொடர்புடைய அண்மைய அபிவிருத்திகளையும் அதேபோன்று, மெய்நிகர் நாணயத்துடன் தொடர்புடைய விசாரணைகளையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு பின்வருவனவற்றை தெரிவிக்க விரும்புகின்றது.

மெய்நிகர் நாணயங்கள், தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் பெருமளவில் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத டிஜிட்டல் ரீதியான பெறுமதியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் இலத்திரனியல் ரீதியாக வர்த்தகப்படுத்தப்படக் கூடியவையாகும்.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 மே

இறக்குமதிச் செலவினம் 2022 மேயில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வீழ்ச்சியடைந்த அதேவேளையில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறையில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக சுருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 மேயில் மெதுவடைந்து காணப்பட்டன. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் 2022 மேயில் அதிகரித்து காணப்பட்டன. அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2022 மே மாத காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட திரவத்தன்மை அழுத்தங்களைக் கருத்திற்கொண்டு, காசு எல்லைத் தேவைப்பாடுகளை மத்திய வங்கி 2022 மேயில் விதித்தவேளையில், திறந்த கணக்கு மற்றும் சரக்குக் கொடுப்பனவு நியதிகள் மீதான கட்டுப்பாடு போன்றவற்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இவ் வழிமுறைகள், முறைசாரா சந்தை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற சந்தைச் செலாவணி வீதங்களுக்கிடையிலான இடைவெளியைச் சுருக்குவதற்கும் உதவி புரிந்தன. அதேவேளை, சந்தை வழிகாட்டலுடன் உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் அழுத்தங்களை நிர்வகிக்க அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளால் உதவியளிக்கப்பட்டு வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 359 ரூபாவாகக் காணப்பட்டது.

Pages

சந்தை அறிவிப்புகள்