நிலவுகின்ற அதிவிசேட பேரண்டப் பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கான சலுகைகள்

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுப் பரவலுடன் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு உதவுமுகமாக 2020 மாச்சு தொடக்கம் இலங்கை மத்திய வங்கி பல சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சட்டஇசைவு தாமதகாலம், கடன் மறுசீரமைப்பு/ மீள்அட்டவணைப்படுத்தல், கடன் அறவீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துதல், குறைந்த செலவில் மூலதனக் கடன்கள், சில வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்களுக்காக கட்டணங்கள் மற்றும் அறவீடுகளைத் தள்ளுபடி செய்தல் போன்றவற்றை இச்சலுகைகள் உள்ளடக்குகின்றன. தனியார் துறை ஊழியர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அத்துடன் சுற்றுலாத் துறை, போக்குவரத்து, தயாரித்தல், சேவைகள், கமத்தொழில், நிர்மாணம், ஆடை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட ஏற்பாட்டுச்சேவை வழங்குதல் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள ஏனைய வியாபாரங்கள் உள்ளடங்கலாக தனிப்பட்டவர்களுக்கு இச்சலுகைகள் வழங்கப்பட்டன. அதற்கமைய, கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட சட்ட இசைவு தாமதகாலத்தின் இறுதிக்கட்டம் 2021.12.31 அன்று முடிவடைந்த அதேவேளை சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்ட கடன் சலுகைக் காலத்தின் இறுதிக்கட்டம் 2022.06.31 அன்று முடிவுற்றது. அதேவேளை, தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய சாத்தியப்பாட்டைக் கொண்ட வணிகங்களிற்கு புத்துயிரளிக்கம் நோக்குடன், கொவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்ட குறை செயற்றிறன் மற்றும் செயற்படா கடன்பெறுநர்களை அடையாளங்காணவும் உதவுமென இலங்கை மத்திய வங்கியானது உரிமம்பெற்ற வங்கிகளில் கொவிட்-19இற்குப் பின்னரான மீளெழுச்சிப் பிரிவுகளை நிறுவுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், இதன்மூலம், கடன் சலுகைக் காலப்பகுதியை நிலைபேறான விதத்தில் நிறைவுசெய்ய வசதியளிக்கிறது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, July 20, 2022