தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் (2013=100) அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 யூலையின் 5.8 சதவீதத்திலிருந்து 2016 ஓகத்தில் 4.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2016 ஓகத்தில் உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்துள்ளன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 யூலையின் 3.4 சதவீதத்திலிருந்து 2016 ஓகத்தில் 3.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. .















'இலங்கையில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான படிப்படியானதொரு வழிகாட்டல்" நூலின் ஆறாவது பதிப்பு இலங்கை மத்திய வங்கியினால் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வெளியீடானது, இலங்கையில் வியாபாரத் தொழில்முயற்சிகளைத் தொடங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் மூடிவிடுதல் தொடர்பில் பயன்மிக்க ஒழுங்குமுறைப்படுத்தல் தகவல்களைக் கொண்டிருக்கின்றது. தொடர்பான நிறுவனங்களினால் முன்மொழியப்பட்டவாறு, 2016இன் முதற்காலாண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அவசியமான திருத்தங்கள் இவ்வெளியீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
