நாணயச் சபை, 2016 ஒத்தோபர் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதன் கூட்டத்தில் 2016 மாச்சு 31இல் முடிவடைந்த ஆண்டுப் பகுதியிலும் அதேபோன்று 2016 ஓகத்து 31இல் முடிவடைந்த ஐந்து மாத காலப்பகுதியிலும் முதனிலை வணிகர்களின் நிதியியல் செயலாற்றம் உள்ளிட்ட தொழிற்பாடு மீதான இடைக்கால அறிக்கையினைப் பரிசீலனையில் எடுத்துக் கொண்டது. முதனிலை வணிகர்களின் செயலாற்றத்திலும் அதேபோன்று வர்த்தகப்படுத்தல் நடவடிக்கைகளின் தன்மையுடன் தொடர்பான குறிப்பிட்ட விடயங்களிலும் கரிசனைக்குரிய பெருமளவு ஒவ்வாத தன்மைகள் கவனிக்கப்பட்டுள்ளன. இது, தொடர்பில் தலத்திலான பரீட்சிப்பு அறிக்கைகள் தொடர்பாக தற்பொழுது இடம்பெற்றுவரும் தயாரிப்புச் செயன்முறையினை விரைவாக நிறைவு செய்யுமாறு நாணயச் சபை அறிவுறுத்தியிருக்கிறது. இது, எதிர்கால நடவடிக்கைகளின் மீது நாணயச் சபை நேரகாலத்துடன் தீர்மானமொன்றினை மேற்கொள்வதனை இயலச்செய்யும்.















2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுபப்தற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைப் பெறுவதற்காக, இலங்கை மத்திய வங்கியில் 2016 செத்தெம்பர் 27ஆம் நாளன்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் திரு. எம்.என். ரணசிங்க அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் திரு. எச். அமரதுங்க அவர்களும் தொடர்பான திணைக்களங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர். இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 
