2016 நவெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஒத்தோபரின் 5.0 சதவீதத்திலிருந்து 2016 நவெம்பரில் 4.1 சதவீதத்திற்கு வீழச்சியடைந்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 நவெம்பரில்ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 நவெம்பரில் மாற்றமின்றி கடந்த மாதத்தின் 4.0 சதவீதத்தில் காணப்பட்டது.  

மாதாந்த மாற்றத்தினைப் பரிசீலனையில் கொள்ளும் பொழுது தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்  ஒத்தோபரில் 114.7 இருந்து 2016 நவெம்பரில் 116.6 சுட்டெண் புள்ளிக்கு அதிகரித்தது. இம் மாதாந்த அதிகரிப்பிற்கு உணவல்லா வகை சார்ந்துள்ள விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். உணவல்லா வகையில் விலைகள் ஆடை மற்றும் காலணி; வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள்; தளபாடம், வீட்டலகுகளின் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டு அலகுகளின் பேணல்; நலன்; தொடர்பூட்டல்; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம் பல்வகைப்பொருட்கள் மற்றும் பணிகள் ஆகிய வகைகளில் காணப்பட்டன. அதேவேளை, போக்குவரத்து மற்றும் உணவகங்கள், சுற்றுலாவிடுதி துணை வகைகளின் விலைகள் அதிகரித்த வேளையில் கல்வி துறை வகையில் விலைகள் மாற்றமின்றிக் காணப்பட்டது. உணவு வகையில் அரிசி, தேங்காய், காய்கறிகள், எலுமிச்சம்பழம் மற்றும் உருளைக் கிழங்கின் விலைகள் இம் மாதகாலப் பகுதியில் அதிகரித்தன. 2016 நவெம்பர் காலப்பகுதியில் வெறியம்சார் குடிவகைள் மற்றும் புகையிலையின் விலைகளும் அதிகரித்தன. வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை, நலன் மற்றும் தொழில்நுட்ப துணை வகைகளின் விலைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களுக்கு பெறுமதிசேர் வரி மீண்டும் விதிக்கப்பட்டமையே காரணமாகும். 

நாட்டின்; அடிப்படைப் பணவீக்கத்தினை பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2016 ஒத்தோபரின் 5.7 சதவீதத்திலிருந்து 2016 நவெம்பரில் 6.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2016 ஒத்தோபரின் 5.7 சதவீதத்திலிருந்து 2016 நவெம்பரில் 5.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.

 முழுவடிவம்

Published Date: 

Wednesday, December 21, 2016