அரச பிணையங்கள் சந்தையில் தொழிற்படுகின்ற முதனிலை வணிகர்களை ஒழுங்குமுறைப்படுத்துகின்றவர் என்ற முறையில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட பேர்பெச்சுவல் றெசறீஸ் லிமிடெட்டின் பரீட்சிப்புத் தொடர்பான அறிக்கை பற்றி அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரந்தளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.
இவ்வறிக்கையினை வெளியிடுவதற்கு சட்ட ரீதியாக அங்கீகாரமளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்திற்குள்ளேயான இலங்கை மத்திய வங்கியின் உள்ளகச் செயன்முறைகள் நிறைவடைந்திருக்கவில்லை என்பதுடன் இறுதி அறிக்கையும் நாணயச் சபையின் பரிசீலனைக்காக இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. அங்கீகாரமளிக்கப்படாத இவ்வெளிப்படுத்துகைகளின் விளைவாக இலங்கை மத்திய வங்கி அதன் உள்ளகக் கட்டுப்பாட்டு பொறிமுறையினை வலுப்படுத்தியிருக்கின்றதுடன் இவ்வறிக்கையினை அதிகாரமளிக்கப்படாத முறையில் வெளியிட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.