Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 ஒத்தோபா்

சுற்றுலா வருவாய்களில் தொடர்ச்சியான வளர்ச்சி காணப்பட்டமைக்கிடையிலும் வர்தத்கப் பற்றாக்குறையில் காணப்பட்ட மோசமான தன்மையின் காரணமாக 2016 ஒத்தோபரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினையே பதிவுசெய்தது. ஏற்றுமதி வருவாய்களில் சிறிதளவு வளர்ச்சி காணப்பட்டபோதும் உயர்ந்த இறக்குமதிச் செலவினங்களின் விளைவாக ஒத்தோபரில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. 2016 ஒத்தோபரில் இறக்குமதி செலவினத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பிற்கு துறைமுகநகர கட்டுமான செயற்றிட்டங்களுக்காக மணல்வாரிக் கப்பலொன்று இறக்குமதி செய்யப்பட்டமையே முக்கிய காரணமாக அமைந்தது. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் சிறிதளவு உயர்வாகக் காணப்பட்ட வேளையில், 2016 ஒத்தோபர் காலப்பகுதியில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்களில் ஆரோக்கியமான வளர்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. கொழும்பு பங்குச்சந்தைக்கான உட்பாய்ச்சல்கள் மற்றும் அரசிற்கான நீண்ட கடன்பெறுகைகள் என்பன சென்மதி நிலுவையின் நிதியியல் கணகக் pற்கு ஆதரவளித்தபோதும் அரச பிணையங்கள் சந்தை 2016 ஒத்தோபர் காலப்பகுதியில் தேறிய வெளிப்பாய்ச்சலொன்றைக் காட்டியது.

2016 திசெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால்  அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 நவெம்பரின் 4.1 சதவீதத்திலிருந்து 2016 திசெம்பரில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 திசெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்தன. 

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 திசெம்பரில் மாற்றமின்றி கடந்த மாதத்தின் 4.0 சதவீதத்தில் காணப்பட்டது.

கொழும்பு 5இல் அமைந்துள்ள விசாகா வித்தியாலயத்தின் 100ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் ஞாபகார்த்த நாணயக் குத்தி

நாட்டின் பிரதான பாடசாலை என்ற ரீதியில் கொழும்பு 5இல் அமைந்துள்ள விசாகா வித்தியாலயம் நாட்டிற்கு ஆற்றிய அதன் பங்களிப்பினை அங்கீகரிக்கின்ற விதத்திலும் அதன் 100ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் விதத்திலும் ரூ.2,000 முகப்புப் பெறுமதியினைக் கொண்ட சுற்றோட்டப்படுத்தப்படாத வெள்ளி ஞாபகார்த்த நாணயக் குத்தியொன்றினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருக்கின்றது. 

முதலாவது நாணயக் குத்தியானது மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமியினால் 23.01.2017 அன்று கொழும்பு 5இலுள்ள விசாகா வித்தியாலயத்தின் ஜெறிமியாஸ் டயஸ் மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் வைத்து அலுவல்சார் ரீதியாக கையளிக்கப்பட்டது.

முழுவடிவம்

ஊழியர் சேம நிதியம் தொடர்பாக எடுக்கப்பட்ட வழிமுறைகள் தொடர்பில் நாணயச் சபையினால் விடுக்கப்பட்ட அறிக்கை

ஊழியர் சேம நிதியம் தொடர்பில் அண்மையில் வெளிவந்த பல ஊடக அறிக்கைகள் கரிசனைகளைத் தோற்றுவிப்பனவாகவுள்ளன. 

2015 மற்றும் 2016ஆம் ஆண்டுப் பகுதியில் அரச பிணையங்கள் தொடர்பில் ஊ.சே. நிதியத்தின் கொடுக்கல்வாங்கல்கள் பற்றி நாணயச் சபையின் பணிப்புரையின் கீழ் தற்பொழுது உள்ளகப் பரீட்சிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை மத்திய வங்கி அலுவலர்களினால் மேற்கொள்ளப்பட்ட உள்ளகத் தொழிற்பாடுகளுடன் தொடர்பான பரீட்சிப்புக்களுடன் தொடர்புபட்டனவாக இருப்பதனால், சட்டத்தினை நடைமுறைக்கிடும் அதிகாரிகளும் 2015 மற்றும் 2016 காலப்பகுதியில் அரச பிணையங்களின் வழங்கல்கள் மற்றும் அவை தொடர்பான விடயங்கள் பற்றி வெளிவாரியான சுயாதீனமான புலானய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.  

ஊ.சே. நிதியத் தொழிற்பாடுகள் தொடர்பில், முதலீடுகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்கின்ற செயன்முறைகளை வலுப்படுத்துவதற்காக, கடந்த ஆறு மாதங்களாக நாணயச் சபை பல்வேறு வழிமுறைகளையும் மேற்கொண்டிருக்கிறது. 

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2016 திசெம்பர்

தயாரிப்புத் துறை  கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் திசெம்பரில் 58.3 ஆக விளங்கி, தயாரிப்பு நடவடிக்கைகள் 2016 திசெம்பரில் தொடர்ந்தும் விரிவடைந்தமையை எடுத்துக்காட்டியது.

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 நவெம்பரில் 59.7 சுட்டெண் புள்ளியிலிருந்து திசெம்பரில் 59.8 சுட்டெண் புள்ளிகளுக்கு சிறிதளவால் அதிகரித்தது.

முழுவடிவம்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 செத்தெமப்ர்

வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட சுருக்கம், சுற்றுலா வருவாய்களில் காணப்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சி என்பனவற்றின் காரணமாக 2016 செத்தெம்பரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையின் செயலாற்றம் மேமப் ட்டது. ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட அதிகரிப்பு இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட குறைப்புடன் சேர்ந்தமையின் விளைவாக செத்தெம்பர் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை குறுக்கமடைந்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள் சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவுசெய்த போதும் இக்காலப்பகுதியில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 2015 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பினைப் பதிவு செய்தன. மேலும், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அரச பிணையங்கள் சந்தை அதேபோன்று அரசாங்கத்திற்கான நீண்டகாலக் கடன் உட்பாய்ச்சல்கள் என்பன 2016 செத்தெம்பரில் நிதியியல் கணககு; வலுவடைய உதவின.

முழுவடிவம்

Pages

சந்தை அறிவிப்புகள்