தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் சனவரியில் 56.2 கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்ததுடன், இது, 2016 திசெம்பருடன் ஒப்பிடுகையில் 2.1 சுட்டெண் புள்ளிகள் குறைவானதாகும். கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சி 2017 சனவரியில் தயாரிப்பு நடவடிக்கைகள் மிதமான வேகத்தில் விரிவடைந்தமையினை எடுத்துக் காட்டியதுடன் இதற்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண்களில் பிரதிபலிக்கப்பட்டவாறு பருவக்காலத்திற்கு பின்னரான முன்னோக்கிய வியாபாரத்திட்டங்களின் மறு ஒழுங்கமைப்பு மேற்கொள்ளப்பட்டமையே பெருமளவிற்குக் காரணமாக அமைந்தது. கொள்வனவு இருப்புத் துணைச் சுட்டெண் சனவரியில் அதிகரித்து இருப்புக்கள் ஒன்று சேர்ந்தமையை எடுத்துக் காட்டியது. இதற்கு நீண்ட நிரமப்லில் வழங்கல் நேரத்தினை நீடிக்கச்செய்த பொருட்களின் வழங்கலில் காணப்படக்கூடிய சாத்தியமான தாமதங்களை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையே முக்கிய காரணமாகும். முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் தொழில்நிலைத் துணைச்சுட்டெண்ணும் அதிகரித்தது. ஒட்டுமொத்த தரவுப்புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து மற்றைய அனைத்து துணைச் சுட்டெண்களும் 50.0 அடிமட்டத்திற்கு மேலேயே காணப்பட்டன.
















