பன்னாட்டு நாணய நிதியம் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் அலுவலர் - மட்டத்திலான உடன்படிக்கையை அடைந்துள்ளது.

இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக பன்னாட்டு நாணய நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சம்ர்ப்பிக்கப்படும்.

  • அலுவலர் மட்டத்திலான உடன்படிக்கை அதிகாரிகளின் முன்னைய நடவடிக்கையின் நிறைவடைதலுக்கும் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் ஒப்புதலுக்கும் உட்பட்டதாகும். இதனை 2017 யூனில் பரிசீலிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
  • புதிய உண்ணாடட்ரசிறைச் சட்டம் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய இறைத்திரட்சிக்கு வழிவகுக்கத்தக்;கதாக இருத்தல் வேண்டும். 
  • நிச்சயமற்ற வெளிநாட்டு சூழலுக்கு மத்தியில் சீர்த்திருத்த உத்வேகத்தை பேணுவது, இறை மற்றும் வெளிநாட்டு பாதிப்புத்தன்மையை கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானதாகும். 

மாச்சு மாதமளவில் கொழும்பிற்கான பயணத்தின் போதான காலப்பகுதியில் அதிகாரிகளுடனான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் மற்றும்  அண்மையில் இடம்பெற்ற வசந்தகால கூட்டத்தை தொடர்ந்து பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழுவானது வொ~pங்டனில் பின்வரும் அறிக்கையினை வெளியிட்டிருந்தது: 

“பன்னாட்டு நாணய நிதியத்தின் குழு, மூன்றாண்டு கால விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஒழுங்குகளினால் ஆதரவளிக்கப்பட்டுவரும் பொருளாதார சீர்த்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் அலுவலர் மட்டத்திலான உடன்படிக்கையை அடைந்துள்ளதுடன் இது அதிகாரிகளின் முன்கூட்டிய நடவடிக்கைகளின் நிறைவுத்தன்மை மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் ஒப்புதல் என்பவற்றிற்க்குட்பட்டதாகவும் இருக்கும்.

“சபை 2017 யூன் மாதமளவில் இரண்டாவது மீளாய்வினை நிறைவேற்றுதல் தொடர்பில் இலங்கையின் வேண்டுகோளை கருத்திற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதுடன் இந்த காலப்பகுதிக்குள் முன்கூட்டிய நடவடிக்கையாக புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தினை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சீர்த்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய தூணாகிய புதிய சட்டமானது அரசிறைச் சேகரிப்பின் அடிப்படையில் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய இறைத்திரட்சிக்கு இட்டுச்செல்லுதலவேண்டும்

“2016 இறுதியில் தவறவிட்ட இலக்கினை அடைந்துகொள்ளும் விதத்தில் சரியான நடவடிக்கையாக தேறிய பன்னாட்டு ஒதுக்கினை மீண்டும் திரட்சிப்படுத்துகின்றமையினை மீளஆரம்பித்தமைக்கு குழுவானது அதிகாரிகளைப் பாராட்டியிருந்தது. இவ்வொதுக்குச் சேகரிப்பானது தொடர வேண்டுமென்பதுடன் இது இலங்கையின் வெளிநாட்டு பாதிப்புத்தன்மையைக் குறைப்பதற்கும் உதவும். 

“முன்னேற்றுதல் தொடர்பில் அதிகாரிகள் அவர்களின் பொருளாதாரச் சீர்த்திருத்த நிகழ்ச்சித்திட்டங்களில் குறிப்பாக இறை நிலைமையில் முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். நிச்சயமற்ற வெளிநாட்டு சூழலில் சீர்த்திருத்த உத்வேகத்தை பேணுகின்றமை இறை மற்றும் வெளிநாட்டுச் சமனிலையற்ற தன்மையைக் கடடு;ப்படுத்துவதற்கு முக்கியமானதாகும்.”

Published Date: 

Wednesday, May 3, 2017