வர்த்தகப் பற்றாக்குறை குறைவடைந்தமை, அதிகரித்த சுற்றுலா வருவாய்கள், நிதியியல் கணக்கிற்கான உயர்நத் உட்பாய்ச்சல்கள் என்பனவற்றின் காரணமாக 2016 யூலையில் வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் மேம்பட்டது. வர்த்தகப் பற்றாக்குறை யூலையில் சுருக்கமடைந்தமைக்கு இறக்குமதிகளில் ஏற்பட்ட குறைப்பு காரணமாக விளங்கியதுடன், இது ஏற்றுமதிகளில் ஏற்பட்ட குறைப்பினை விஞ்சிகக் hணப்பட்டது. சுற்றுலா வருவாய்கள் அதிகரித்த வேளையில், இம்மாதகாலப்பகுதியில் தொழிலாளர் பணவலுப்பல்கள் முன்னைய ஆண்டின் தொடர்ச்சியான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்தன. 10ஆவது நாட்டிறக்hன பன்னாட்டு முறிகளின் வழங்கலிருந்தான ஐ.அ.டொலர் 1500 மில்லியன் கொண்ட பெறுகைகள், கூட்டுக்கடன் வசதிகளிலிருந்தான ஐ.அ.டொலர் 300 மில்லியன், அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை என்பனவற்றில் பதிவுசெய்யப்பட்ட தேறிய உட்பாய்ச்சல்கள் என்பன நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்களை பலப்படுத்தியமையின் காரணமாக சென்மதி நிலுவை மீதான அழுத்தம் தளர்வடைந்தது.