இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 யூன்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் யூன் மாதத்தில் 56.1 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 மே மாதத்துடன் ஒப்பிடும் போது 1.8 சுட்டெண் புள்ளிகளை கொண்ட ஒரு குறைவாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகள் 2017 யூன் மாதத்தில் ஒரு குறைவான வேகத்தில் விரிவடைந்தமையினை குறித்து காட்டுவதுடன் இதற்கு பாதகமான வானிலை நிலைமைகளினால் பகுதியளவில் செல்வாக்கு செலுத்தப்பட்ட புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட ஒரு குறைவே பிரதான காரணமாக அமைந்தன. இதன் விளைவாக மேலதிகமான இருப்பு மட்டங்கள் உருவாக்கப்பட்டதுடன் நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரத்தில் ஒரு சிறிதளவான குறைவும் உணரப்பட்டது. இருப்பினும், தொழில்நிலை மட்டமானது முன்னைய மாதத்தில் உணரப்பட்ட சுருக்கத்திலிருந்து மீட்சியடைந்து ஒரு மேம்பாட்டினை காட்டியது. மேலும், கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது. இதற்கு மேலும், நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான மேம்பாடொன்றினை குறித்துக்காட்டியது.
 பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2017 மேயின் 55.3 சுட்டெண் புள்ளியிலிருந்து யூன் மாதத்தில் 59.2 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. பணிகள் துறையில் ஏற்பட்ட இவ் அதிகரிப்பிற்கு புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள் போன்றன ஆதரவளித்தன. நிலுவையிலுள்ள பணிகள் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு மெதுவடைந்த வேகத்தில் குறைவடைந்து காணப்பட்டது. நிதியியல் துறையானது அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பணியாற்றுவதற்கான தொழில்நுட்ப முன்னேற்ற பின்பற்றுகையினூடாக புதிய நடவடிக்கைகளின் அதிகரிப்பிற்கு பங்களிப்பு செய்தது. வியாபார நடவடிக்கைகள் மட்டத்தில் ஒரு அதிகரிப்பு, பிரதானமாக சுகாதார துறையில் பதிவு செய்தது. தங்குமிடம், உணவு மற்றும் குடிபான துறைகளானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா நடவடிக்கைகளில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியின் காரணமாக அடுத்த மூன்று மாத காலப்பகுதியில் நடவடிக்கைகளில் ஒரு அதிகரிப்பை எதிர்பார்க்கின்றன. விதிக்கப்பட்ட விலைகள் சுட்டெண் 2017 இன் மே மாதத்துடன்; ஒப்பிடுகையில் யூன் மாதத்தில் எந்தவித பண்டிகைகளின் கேள்விகளின் இல்லாமை காரணமாக மாற்றமற்ற தன்மை உணரப்பட்டது. இதே வேளையில், தொழிலாளர் செலவிற்க்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்த தொழில்நிலை மட்டத்தினால் 2017 யூனில் சிறிதளவில் அதிகரித்துக் காணப்பட்டது.

 

FULL TEXT

Published Date: 

Friday, July 14, 2017