Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நாணயச் சபையின் உறுப்பினராக திரு நிஹால் பொன்சேகா நியமனம்

திரு. அந்தோனி நிஹால் பொன்சேகா, நாணய விதிச் சட்டத்தின் பிரிவு 8(2) (இ) இன் நியதிகளுக்கிணங்க 2016 யூலை 27ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினரொருவராக மேதகு சனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இலங்கை மத்திய வங்கி அரச பிணையங்கள் இரண்டாந்தரச் சந்தைத் தகவல்கள் மீதான வர்த்தகப்படுத்தல் புள்ளிவிபரங்களின் தொகுப்பினை முதல் தடவையாக வெளியிடுகின்றது

அரச பிணையங்கள் சந்தையினை அபிவிருத்தி செய்வதற்கான மேலுமொரு கொள்கை வழிமுறையாக, மத்திய வங்கி இன்றிலிருந்து, இரண்டாந்தரச் சந்தையிலுள்ள அரச பிணையங்களின் உண்மையான வர்த்தகப்படுத்தல் தொடர்பில் வர்த்தகப்படுத்தல் புள்ளிவிபரங்களின் தொகுப்பினை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. 2016 ஓகத்து 1 இலிருந்து, அனைத்து முதனிலை வணிகர்களும் முக்கிய பன்னாட்டு நிதியியல் வர்த்தகப்படுத்தல் மற்றும் தகவல் இலத்திரனியல் தளமாக விளங்கும் புளும்போக்கினூடாக மத்திய வங்கியினால் ஒழுங்கு செய்யப்பட்ட வர்த்தகப்படுத்தல் தளத்தில் முதனிலை வணிகர்களுக்கிடையிலான வர்த்தகத்தினை மேற்கொள்ள வேண்டும் என கேட்கப்பட்டிருக்கின்றனர். மேலும் அனைத்து முதனிலை வணிகர்களும் ரூ.50 மில்லியனுக்கு மேற்பட்ட பெறுமதியினைக் கொண்ட அரச பிணையங்களின் அனைத்து உடனடி விற்பனைகளையும் ஒவ்nவாரு கொடுக்கல்வாங்கலும் முடிவடைந்த 30 நிமிடங்களுக்குள் இத்தளத்தின் முதலீட்டாளர்களுக்கு அறிவித்தல் வேண்டும்.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 ஏப்பிறல்

2016 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் மிதமான செயலாற்றமொன்றினைப் பதிவு செய்தது. வர்த்தகப் பற்றாக்குறை இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட பெருமளவு வீழ்ச்சின் விளைவாக சுருக்கமடைந்தமைக்கு 2016 ஏப்பிறல் காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் ஊர்திகள் மற்றும் அரிசி என்பனவற்றின் இறக்குமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். ஏப்பிறலில் தொழிலாளா் பணவனுப்பல்கள் சிறிதளவு குறைவாக இருந்தபோதும் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் அதிகரித்து செனம் தி நிலுவையின் நடைமுறைக் கணக்கினை வலுப்படுத்திய வேளையில் நிதியியல் கணக்கpற்கான உட்பாய்ச்சல்கள் தொடர்ந்தும் மிதமானவையாகக் காணப்பட்டன.

முழுவடிவம்

நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 யூலை

முதன்மைப் பணவீக்கம் மற்றும் மையப் பணவீக்கம் இரண்டிலும் தொடர்ந்தும் காணப்பட்ட அதிகரித்துச் செல்லும் போக்கு பொருளாதாரத்தில் கேள்வியினால் தூண்டப்பட்ட பணவீக்க அழுத்தங்களில் உயர்வு ஏற்படுவதனைப் பிரபலித்தது. மோசமான வானிலை நிலைமைகளினால் தோன்றிய வழங்கல்பக்க இடையூறுகள் மற்றும் வரி அமைப்பில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்கள் என்பன கடந்த இரண்டு மாதங்களில் பணவீக்கத்தின் மேல் நோக்கிய அசைவிற்குப் பங்களித்தன. அதேவேளை, உண்மைத் துறையில் கிடைக்கத்தக்கதாகவுள்ள குறிகாட்டிகள் பொருளாதார நடவடிக்கையில் தொடர்ச்சியான வளர்ச்சி உத்வேகம் காணப்படுவதனை எடுத்துக்காட்டின. குறிப்பாக, வலு உருவாக்கம் சுற்றுலா மற்றும் துறைமுகத்துடன் தொடர்பான பணிகள், கட்டவாக்கத் துறை, முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதிகள் அதேபோன்று தயாரிப்பு மற்றும் பணிகள் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் என்பன கடந்த சில மாதங்களாக முன்னேற்றங்களைக் காட்டின.  

2016 யூனில் பணவீக்கம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்படும் மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 மேயில் 5.3 சதவீதத்திலிருந்து 2016 யூனில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 யூனில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்தன.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 மேயில் 2.7 சதவீதத்திலிருந்து 2016 யூலையில் 3.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு - 2016 யூன்

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவதானிக்கப்பட்ட சுருக்கத்திலிருந்து 2016 யூனில் சாதகமான நிலைமையொன்றிற்கு மீட்சியடைந்து 55.1 சதவீத சுட்டெண் புள்ளியைப் பதிவுசெய்தது. இது 2016 மேயிலிருந்து 7.2 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். இம்முன்னேற்றத்திற்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பே பக்கபலமாக விளங்கியது. மேலும், அனைத்துக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் நிரம்பலர் வழங்கலிலிருந்து விலகி முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்தது. ஒட்டுமொத்த தரவுப் புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து அனைத்து துணைச் சுட்டெண்களும் தொழில்நிலைச் சுட்டெண்ணிலிருந்து விலகி 50.0 கீழ் மட்ட நிலைக்கு மேலே காணப்பட்டது. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பக்களும் அடுத்த மூன்று மாதங்களுக்கு முன்னேற்றமொன்றினை எடுத்துக்காட்டின. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2015 யூனுடன் ஒப்பிடுகையில் 2.4 சுட்டெண் புள்ளிகள் கொண்ட சிறிதளவு வீழ்ச்சியைக் காட்டியது.  

Pages

சந்தை அறிவிப்புகள்