வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - மே 2017

நாட்டிற்கான 11ஆவது பன்னாட்டு முறி வழங்கல்களிலிருந்தான வருவாய்கள் மற்றும் 2017 மேயில் கிடைக்கப்பெற்ற குழுநிலைக் கடன் வசதி போன்றவற்றின் மூலம் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கான குறிப்பிடத்தக்க உட்பாய்ச்சல்களால் இலங்கையின் வெளிநாட்டுத் துறை வலுவடைந்தது. இவ் உட்பாய்ச்சல்கள், 2017 ஏப்பிறல் இறுதியில் ஐ.அ.டொலர் 5.0 பில்லியனாகக் காணப்பட்ட மொத்த அலுவல்சார் ஒதுக்குகளினை 2017 ஏப்பிறல் இறுதியில் ஐ.அ.டொலர் 6.8 பில்லியனானதொரு அதிகரிப்பினை தோற்றுவித்தது. இலங்கை பொருளாதாரத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையானது அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை போன்றவற்றின் தொடர்ச்சியான உட்பாய்ச்சல்கள் மூலம் தொடர்ந்தும் மிதப்பாகக் காணப்பட்டது. எனினும், வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைதல் மற்றும் சுற்றுலா மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களிலிருந்தான வருவாய்கள் மெதுவடைதல் போன்றவற்றின் மூலம் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கு மேமாத காலப்பகுதியில் ஒரு கலப்பு செயலாற்றத்தினைக் காட்டியது. தொடர்ச்சியான மூன்றாவது மாதமாக ஏற்றுமதி அதிகரித்துக் காணப்பட்டமைக்கு மத்தியிலும், இறக்குமதி செலவினத்திலான உயர்ந்தளவு அதிகரிப்பு வர்த்தகப் பற்றாக்குறையில் விரிவாக்கத்தினை மேலும் தோற்றுவித்தது. ஒட்டுமொத்தமாக, முதலீட்டாளர்களின் சாதகமான உணர்திறன்கள் மூலமாக நிதியியல் கணக்கின் தொடர்ச்சியான உட்பாய்ச்சல்கள் மற்றும் நடைமுறைக் கணக்கின் தொடர்ச்சியான உட்பாய்ச்சல்கள் மற்றும் நடைமுறைக் கணக்கின் ஓர் படிப்படியான மீள் சமநிலைப்படுத்தல் போன்றவை 2017இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையில் சாதகமான தாக்கத்தினை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, August 1, 2017